இந்திய அணியின் பயிற்சியாளர் மற்றும் குழு யார்?.. அறிவித்தது பிசிசிஐ.. பரபரப்புக்கு முற்றுப்புள்ளி!

0
2259
Dravid

இந்திய அணி உள்நாட்டில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் எதிர்பாராத விதமாக இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் தோற்று கோப்பையை இழந்தது.

இதற்கடுத்து உலகக் கோப்பையுடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பதவிக்காலமும் முடிவுக்கு வந்தது. மேற்கொண்டு யார் புதிய பயிற்சியாளர் என்கின்ற விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் ராகுல் டிராவிட் தன்னுடைய சொந்த மாநிலமான பெங்களூரில் இருந்து தேசிய கிரிக்கெட் அகாடமி பொறுப்பை மட்டும் வகித்திருக்க விரும்புகிறார் என்கின்ற செய்திகள் வந்தன.

மேலும் இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக விவிஎஸ் லட்சுமணன் நியமிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் செய்திகள் கூறப்பட்டது.

இந்த நிலையில் பிசிசிஐ அதிரடியாக ராகுல் டிராவிட்டை தொடர்ந்து பயிற்சியாளராக நியமித்து இருக்கிறது. மேலும் ராகுல் டிராவிட் உடன் பழைய பயிற்சியாளர்கள் குழுவில் இருந்த பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர், பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்பரே, பீல்டிங் பயிற்சியாளர் திலக் மூவரும் தொடர்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

இதுகுறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறும் பொழுது ” ராகுல் டிராவிட் அவர்கள் தனது ஒப்பற்ற சிறந்த அர்ப்பணிப்புடன் தன்னை மீண்டும் ஒரு முறை நிரூபித்து இருந்தார். எங்கள் உலகக் கோப்பை பயணம் சாதாரணமானது கிடையாது. அணி செழிப்பான முறையில் வந்ததற்காக, அதற்கு சரியான தளத்தை அமைத்ததற்காக அவர் பாராட்டுக்கு தகுதியானவர்!” என்று கூறி இருக்கிறார்!

இதுகுறித்து தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட ராகுல் டிராவிட் கூறும் பொழுது “இந்திய அணியுடன் கடந்த இரண்டு வருடங்கள் மறக்க முடியாதவை. நாங்கள் ஒன்றாக உயர்வையும் தாழ்வையும் சந்தித்தோம். ட்ரெஸ்ஸிங் ரூமில் நாங்கள் உண்டாக்கிய கலாச்சாரம் குறித்து உண்மையில் பெருமைப்படுகிறோம்!” என்று கூறியிருக்கிறார்!