ரோகித் – பாபர் யார் சிறந்த கேப்டன்? – யூனுஸ் கான் வெளிப்படையான கருத்து!

0
318
Rohit -Babar

இந்திய கிரிக்கெட்டை ஒரே ஒரு தோல்வி பல மாதிரியாக மாற்றி அமைத்திருக்கிறது. அந்தத் தோல்வி கடந்த ஆண்டு என்னைத்தேடி அரபு எமிரேட்டில் நடந்த டி20 உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி தந்தது என்பது குறிப்பிடத்தக்கது!

அந்தத் தொடரே விராட் கோலி இந்திய வெள்ளைப் பந்து அணிக்கு கடைசியாக கேப்டனாக இருந்தது. அந்த உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கேப்டன் விராட் கோலி அரைசதம் அடித்து இந்திய அணி 151 ரன்களை எடுத்திருந்த போதும், பாகிஸ்தான் அணி துவக்க ஆட்டக்காரர்கள் பாபர் ஆசம், முகமத் ரிஸ்வான் இருவரும் ஆட்டமிழக்காமல் 152 ரன்களை சேர்த்து இந்திய அணிக்கு மிகப்பெரிய தோல்வியை பரிசாக கொடுத்தார்கள். இந்தத் தோல்வியை உலக கோப்பை தொடரில் இருந்து இந்தியா அணி முதல் சுற்றோடு வெளியேற காரணமாக இருந்தது.

- Advertisement -

இதற்குப் பிறகு ரோகித் சர்மா மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளுக்கும் இந்திய அணிக்கு கேப்டனாக தேர்வு செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறார். இத்தோடு புதிய தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் வர இந்திய அணிக்குள் வேகமான மாற்றங்கள் முன்னெடுக்கப்பட்டது. இந்திய அணி வெள்ளை பந்து போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்யும் பொழுது இலக்கை நிர்ணயிப்பதில் தடுமாறி வந்தது. ஆனால் ரோகித் சர்மா ராகுல் டிராவிட் கூட்டணி அதிரடியான ஆட்டத்தை கையில் எடுத்து இப்பொழுது இதற்கு முடிவு கட்டி இருக்கிறது என்று கூறலாம். பல இளைய வீரர்களுக்கும் மூத்த வீரர்களுக்கும் வாய்ப்பளித்து ஒரு புது அணியை இவர்கள் உருவாக்கி இருக்கிறார்கள்.

கடந்த டி20 உலக கோப்பையில் ஏற்பட்ட தோல்வி இந்திய கிரிக்கெட்டில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவந்து, பல பரிசோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு ஒரு அணி வாக்கப்பட்டு இருக்கிறது. அப்படி உருவாக்கப்பட்ட அணியை பரிசோதிக்கும் களமாகத்தான் நாளை துவங்க இருக்கும் ஆசிய கோப்பை தொடர் இருக்கப்போகிறது. இந்தத் தொடர் அடுத்து நடக்கும் டி20 உலகக் கோப்பைக்கான ஒத்திகை என்றே கூறலாம்.

நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை துபாய் மைதானத்தில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டிக்கு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. உலக கிரிக்கெட்டில் திரும்பிய பக்கமெல்லாம் இந்தப் போட்டி குறித்தான பேச்சுகள் தான் அதிகமாக இருக்கிறது.

- Advertisement -

தற்போது இந்திய பாகிஸ்தான் அணியின் கேப்டன் களை வைத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரும் கேப்டனுமான யூனிஸ்கான் இருவரில் யார் சிறந்த கேப்டன் என்று தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார். இது பற்றி அவர் கூறும் பொழுது ” ரோகித் மற்றும் பாபர் இருவரும் தங்கள் அணிகளுக்கு பெரிய ரன்களைக் குவிப்பதில் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதும், முக்கியத்துவம் வாய்ந்த செயல்பாடுகளை வெளிப்படுத்துவதில் அவர்கள் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதும் நமக்குத் தெரியும். ஆனால் கேப்டன் சியில் ரோகித் சர்மா பாபரை விட கொஞ்சம் முன்னணியில் இருக்கிறார். ரோகித் சர்மா பாபரை விட அதிக காலம் கேப்டன்சியில் இருந்திருக்கிறார். மேலும் அவர் சில நல்ல கேப்டன்களுக்கு கீழும் விளையாடி இருக்கிறார். அதனால் ரோகித் சர்மாவுக்கு கேப்டன்சியில் நல்ல அனுபவம் இருக்கிறது” என்று தெரிவித்து உள்ளார்!