இந்திய தேர்வுக்குழு தலைவர் பதவிக்கு யார் விண்ணப்பிக்க முடியும்? அதற்கான தகுதிகள் என்ன? தலைவருக்கான பொறுப்புகள் என்ன?

0
414
Bcci

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுவின் தலைவராக இருந்த சேத்தன் சர்மா சில உள்விவகாரங்களை வெளியில் பேசிய காரணத்திற்காக அவரே ராஜினாமா செய்து கொண்டார்!

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுக்கான தலைவர் பதவி காலியாக இருக்கிறது. தற்பொழுது இந்திய கிரிக்கெட் வாரியம் அதற்கான இடத்தை நிரப்புவதற்கு அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

- Advertisement -

இந்திய தேர்வு குழுவின் தலைவராக இருப்பதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சில அடிப்படை விதிகளை உருவாக்கி இருக்கிறது. அந்த விதிகளுக்குள் பொருந்தக் கூடியவர்கள்தான் இந்த பதவிக்கு விண்ணப்பிக்க முடியும்.

இந்திய தேர்வுக்குழுவின் தலைவர் பதவிக்கு இந்திய அணிக்கு ஏழு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும், இல்லையென்றால் உள்நாட்டில் 30 முதல் தர போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும் இல்லையென்றால் பத்து ஒரு நாள் போட்டிகள் மற்றும் 20 முதல் தர போட்டிகளில் விளையாடு இருக்க வேண்டும்.

தேர்வு குழு தலைவர் மற்றும் தேர்வு குழுவின் பணியாக இந்திய கிரிக்கெட் வாரியம் வரையறுத்துள்ள வேலைகள் ;

- Advertisement -

நியாயமான மற்றும் வெளிப்படை தன்மையோடு சிறந்த அணியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இந்திய தேசிய கிரிக்கெட் அணிக்கு நல்ல பெஞ்ச் பலத்தை திட்டமிட்டு உருவாக்க வேண்டும்.

எப்போது தேவைப்பட்டாலும் குழு கூட்டங்களில் கலந்து கொள்ள தயாராக இருக்க வேண்டும்.

உள்நாட்டு கிரிக்கெட் தொடர்கள் மற்றும் சர்வதேச கிரிக்கெட் தொடர்களை பார்வையிட்டு வீரர்கள் குறித்து அறிந்து கொள்வதற்கு பயணப்பட வேண்டும்.

காலாண்டுகள் அடிப்படையில் பிசிசிஐயின் அபெக்ஸ் குழுவுக்கு அணியின் செயல்பாடுகள் மற்றும் மதிப்பீட்டு அறிக்கையைக் கொடுக்க வேண்டும்.

பிசிசிஐ அறிவுறுத்தலின்படி அணித்தேர்வு குறித்து ஊடகங்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.

மூன்று வடிவ இந்திய கிரிக்கெட் அணிக்குச் சரியான கேப்டனை நியமிக்க வேண்டும்.

பிசிசிஐயின் ஒழுங்குமுறைகள் மற்றும் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

மேலும் மிக முக்கியமாக இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றால் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும். தற்பொழுது கிரிக்கெட் வாரியத்தில் எந்த விதமான ஐந்தாண்டு பதவிகளிலும் இருக்கக் கூடாது.