ஒருவேளை ரோகித் சர்மா டெஸ்ட் கேப்டன்ஷிப்பை விட்டு விலகினால்… அடுத்த கேப்டனாக வாய்ப்புள்ள 3 இந்திய வீரர்கள்!

0
1013

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் படுதோல்வியை சந்தித்தன் காரணமாக ரோகித் சர்மா டெஸ்ட் கேப்டன் பொறுப்பிலிருந்து விலக நேரிடும் பட்சத்தில், இந்திய அணிக்கு அடுத்த டெஸ்ட் கேப்டனாக நியமிக்க வாய்ப்புள்ள 3 இந்திய வீரர்களின் பட்டியலை விளக்கமாக கீழே காண்போம்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் தோல்வி இந்திய அணியில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருவதற்கு வழிவகை செய்துள்ளது. அந்த வகையில் ரோகித் சர்மாவின் கேப்டன் பொறுப்பும் தற்போது விமர்சனத்திற்கு உள்ளாகி அவரை மாற்ற வேண்டும் என பல தரப்பில் இருந்து கூறப்பட்டு வருகிறது.

- Advertisement -

ரோகித் சர்மா தனது கேப்டன் பொறுப்பில் சரியாக செயல்படவில்லை. டாஸ் வென்று உரிய முடிவுகளை எடுக்கவில்லை. முக்கியமான பவுலர்களை பிளேயிங் லெவனில் எடுக்காமல் தவறு செய்து விட்டார் என பல வகைகளில் விமர்சனங்களை முன்வைத்து வரும் முன்னாள் வீரர்கள், விமர்சனர்கள் மற்றும் ரசிகர்கள் பலர், இளம் கேப்டனை கொண்டுவந்து அணியை அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளில் வழி நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். இதுதான் நடவடிக்கை எடுக்க சரியான நேரம் என்றும் பேசி வருகின்றனர்

ஆனால் பிசிசிஐ தற்போது கேப்டன் பொறுப்பில் மாற்றம் கொண்டு வரும் எண்ணத்தில் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறது. ஆனால் ரோகித் சர்மா விலகலாமா வேண்டாமா என்கிற குழப்பத்தில் இருக்கிறார். ஏனெனில் அடுத்த ஐந்து மாதங்களில் 50 ஓவர் உலகக் கோப்பை வர விருப்பதால் அதில் கவனம் செலுத்துவதற்கு இத்தகைய எண்ணங்களில் இருக்கலாம் கூறப்படுகிறது.

ஒருவேளை ரோகித் சர்மா தானத டெஸ்ட் கேப்டன்ஷிப் பொறுப்பில் இருந்து விலகினால் அடுத்த கேப்டனாக வருவதற்கு வாய்ப்புள்ள வீரர்களின் பட்டியலை பின்வருமாறு காண்போம்.

- Advertisement -

2021 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு சென்று பார்டர்-கவாஸ்கர் டிராபி விளையாடிய போது கேப்டன் விராத் கோலி முதல் டெஸ்ட் முடிந்த பிறகு சொந்தக்காரணங்களுக்காக நாடு திரும்பி வட்டார். அதன் பிறகு மீதம் இருக்கும் டெஸ்ட் போட்டிகளில் இந்தியா அணியை ரகானே வழிநடத்தி கோப்பையை பெற்றுக் கொடுத்தார். அவரை கேப்டன் பொறுப்பில் நியமிக்கலாம். ஆனால் அவருக்கு 35 வயது நெருங்கிவிட்டது. அடுத்த ஐந்து வருடங்களுக்கு ஒரு கேப்டன் இருப்பது சரியாக இருக்கும் எனும் பட்சத்தில் நியமனம் சரி வருமா என்பதில் சந்தேகம் உள்ளது ஆகையால் இளம் கேப்டன்களை பார்ப்போம்.

பும்ரா

சமீப காலமாக காயம் காரணமாக பும்ரா சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட முடியாமல் அவதிப்பட்டு வந்தாலும், மீண்டும் அவர் அணிக்கு திரும்பும் பட்சத்தில் ஆக்ரோஷம் அதிகமாக இருக்கும். மேலும் அவருக்கு தற்போது 30 வயது தான் ஆகிறது. ஆகையால் அடுத்த ஐந்து வருடங்களுக்கு அவரை நியமிப்பது சரியாக இருக்கும். ஏற்கனவே தென்னாப்பிரிக்கா தொடரில் கேப்டன் பொறுப்பை ஏற்று விளையாடினார். அதேபோல் இங்கிலாந்திலும் ஒரு டெஸ்டில் கேப்டன் பொறுப்பில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.

2. ஷ்ரேயாஸ் ஐயர்

நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கான அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் எடுக்கப்பட்டிருந்தார். துரதிஷ்டவசமாக அவருக்கு காயம் ஏற்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொண்டதால் அணியில் இருக்க முடியவில்லை. ஆனால் கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளில் இந்திய அணிக்கு பேட்டிங்கில் முக்கிய பங்காற்றினார். தற்போது அவருக்கு 29 வயது தான் ஆகிறது. எதிர்கால கேப்டனாக வருவதற்கு அத்தனை வாய்ப்புகளும் இருக்கின்றன. ஏனெனில் ஐபிஎல் போட்டிகள் மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் என கேப்டன் பொறுப்பில் இருந்திருக்கிறார் மேலும் இந்தியா ஏ அணியிலும் தொடர்ந்து கேப்டனாகவும் இருந்திருக்கிறார்.

3. ரிஷப் பண்ட்

இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வரை வருவதற்கு ரிஷப் பன்ட் பங்களிப்பு இன்றியமையாததாக இருந்திருக்கிறது. கடந்த டிசம்பர் மாதம் கார் விபத்தில் சிக்கிய பிறகு பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் அவர் இல்லாதது பெரிய இழப்பை கொடுத்திருப்பது காண முடிந்தது. மேலும் இங்கிலாந்தில் விளையாடிய பைனலிலும் அவரைப் போன்ற ஒரு ஆக்ரோஷமான பேட்டிங் விளையாடக்கூடிய வீரரை இந்திய அணி மிஸ் செய்தது.

கடந்த இரண்டு வருடங்களாக ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக இருந்து வரும் ரிஷப் பண்ட் சர்வதேச போட்டிகளில் வீரர்களை கையாள்வதற்கு தயாராகியுள்ளார். ஆகையால் அவரை டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் நியமிப்பது சரியாக இருக்கும். மேலும் அவருக்கு தற்போது 24 வயது தான் ஆகிறது. இப்போது நியமிக்கும் பட்சத்தில் அடுத்த ஓரிரு ஆண்டுகளில் நன்றாக புரிந்து கொண்டு இந்திய அணியை குறைந்தபட்சம் ஏழு எட்டு ஆண்டுகளுக்கு மேல் வழி நடத்துவதற்கு சரியான வீரராகவும் இருப்பார். மேலும் சமீப காலமாக டெஸ்ட் போட்டிகளில் ஆக்ரோஷம் தேவைப்படுகிறது. ஆகையால் இவரை போன்ற அணுகுமுறை கொண்ட வீரர் கட்டாயம் தேவை.