ஆசிய கோப்பையை எந்த அணி வெல்லும்? ரவிச்சந்திரன் அஸ்வின் சூசகமான ஆச்சரியமான பதில்!

0
650
Ashwin

பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் ஹைபிரிட் முறையில் இன்று 16ஆவது ஆசியக் கோப்பை தொடர் துவங்குகிறது. முதல் போட்டி பாகிஸ்தான் முல்தான் மைதானத்தில் பாகிஸ்தான் மற்றும் நேபாள் அணிகளுக்கு இடையே துவங்குகிறது!

இந்த ஆசியக் கோப்பையில் நேபாள் அணி தவிர்த்து இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகிய ஐந்து அணிகளும் இந்தியாவில் நடைபெற இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்று இருக்கின்றன.

- Advertisement -

ஆசிய அணிகளில் தற்போது சிறிய அணிகள் என்று யாரையும் குறிப்பிட்டு ஒதுக்க முடியாத நிலைதான் இருக்கிறது. மேலும் ஆசிய கண்டத்தில் தொடர் நடப்பதால் யாரும் யாரை வேண்டுமானாலும் அன்றைய நாளில் வீழ்த்தக்கூடிய பலத்தில் இருக்கிறார்கள்.

நடக்க இருக்கின்ற ஆசிய கோப்பை தொடரில் யார் மிகவும் வலுவான அணியாக இருக்கிறார்கள்? யார் வெல்லக்கூடிய அதிக வாய்ப்பில் இருக்கிறார்கள்? என்பது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியிருந்தார். இதில் அவர் ஒரு அணியை பற்றி கூறும் பொழுது, அவர் சூசகமாக அந்த அணி தான் கோப்பையை வெல்லும் என்பதாக இருந்தது.

இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் கூறும் பொழுது “பாகிஸ்தானை பார்க்க எனக்கு பொறாமையாக இருக்கிறது. கடந்த ஐந்து ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் ஆசியக் கோப்பை மற்றும் உலகக்கோப்பை மாதிரியான பெரிய தொடர்களில் போராடினார்கள். அதே சமயத்தில் அதற்கு முன்பு அவர்கள் பெரிய தொடர்களில் வெல்லவும் செய்திருக்கிறார்கள். ஆனால் கடந்த ஐந்து ஆறு ஆண்டுகளில் அவர்கள் எழுச்சி பெற்று இருக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணமாக பாபர் மற்றும் ரிஸ்வான் இருக்கிறார்கள்.

- Advertisement -

இது அனைத்தும் அந்த அணியின் ஆழம் எவ்வளவு இருக்கிறது என்பதை பொறுத்தது. பாகிஸ்தான் நிறைய நல்ல பேட்டர்களை உருவாக்கி இருக்கிறது. அவர்கள் டேப் பால் கிரிக்கெட் விளையாடுவதால் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு பஞ்சமே கிடையாது.

இந்த ஐந்து ஆறு ஆண்டுகளில் அவர்கள் மீண்டும் எழுச்சி பெற்று வந்ததற்கு மிக முக்கியமான காரணம், அவர்கள் வெளிநாடுகளில் நடைபெறும் வெவ்வேறு டி20 லீக்குகளில் விளையாடுவதுதான். அவர்களிடம் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரும் இருக்கிறது.

அவர்கள் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுகிறார்கள். அதே நேரத்தில் சொந்தமாக உள்நாட்டில் டி20 கிரிக்கெட் தொடர் விளையாடுகிறார்கள். ஆனால் அவர்கள் மேலும் ஆஸ்திரேலியா இங்கிலாந்து என உலகம் முழுவதும் டி20 லீக்குகள் விளையாடுகிறார்கள். இந்த வருடம் கரீபியன் பிரிமியர் லீக்கில் அவர்கள் அதிகம் விளையாடவில்லை. ஆனால் அங்கும் அவர்களின் ஆதிக்கம் இருந்தது. எமிரேட், அமெரிக்கா, கனடா என்று எல்லா இடங்களிலும் விளையாடுகிறார்கள். திறமை வெவ்வேறு இடங்களில் வாய்ப்பை பெறும் பொழுது அது மேலும் கூர்மையாகிறது.

இதனால்தான் கடந்த ஐந்து ஆறு ஆண்டுகளில் பாகிஸ்தான் கிரிக்கெட் நல்ல வீரர்கள் கிடைத்து வருகிறார்கள். அவர்கள் பல சூழ்நிலைகளில் விளையாடி இருப்பதால், அவர்களால் பெரிய போட்டிகளில் தங்களை வெளிப்படுத்தி வெற்றியை கொண்டு வர முடியும்!” என்று கூறி இருக்கிறார்!