“கிரிக்கெட் உலகை கலக்கக்கூடிய எங்க பிளேயர் உலகக் கோப்பைக்கு வருவார்”. பீட்டர்சன் எச்சரிக்கை!

0
3274
Pietersen

கிரிக்கெட் உலகில் இனவெறி காரணத்தினால் தடை செய்யப்பட்டு இருந்த தென் ஆப்பிரிக்க அணி மீண்டும் திரும்பி வந்த பொழுது அசுரத்தனமாக இருந்தது.

ஆலன் டொனால்ட், டேரல் கல்லினன், கேரி கிறிஸ்டன், ஹன்சி குரோனியா, ஜாக் கல்லீஸ், ஷான் பொல்லாக், ஜாண்டி ரோட்ஸ், லான் க்ளூஸ்னர் என்று பல ஜாம்பவான்களோடு உலக கிரிக்கெட்டின் அத்தனை அணிகளுக்கும் சவால் விட்டது.

- Advertisement -

இதற்கடுத்த ஒரு அணி கிரேம் ஸ்மித், ஏபி.டிவில்லியர்ஸ், அசிம் ஆம்லா, டேல் ஸ்டெயின், பிலாண்டர், மார்க்கல் பிரதர்ஸ் என்று இதுவும் அசுரத்தனமான ஒரு அணியாக விளங்கியது.

எண்ணற்ற சாம்பியன் வீரர்களை தொடர்ச்சியாக அணியில் கொண்டிருந்தாலும், தென்னாபிரிக்க அணி இதுவரை சர்வதேச அளவில் எந்த ஒரு ஐசிசி கோப்பைகளையும் வென்றது கிடையாது. குறிப்பாக இறுதிப் போட்டிக்கு முன்னேறாமல் அரை இறுதிப் போட்டியோடு தோற்றுவிடும்.

தற்போது முக்கியமான வீரர்கள் அனைவரும் அணியில் இருந்து ஓய்வு பெற்று இருக்கும் நிலையில் தென் ஆப்பிரிக்கா அணி பலவீனமான அணியாகவே வெளியில் பார்க்கப்படுகிறது. மிகக் குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில்.

- Advertisement -

இந்த நிலையில் இந்தியாவில் இந்த ஆண்டு அக்டோபர் நவம்பர் மாதங்களில் நடந்து முடிய இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பைக்கு தென் ஆப்பிரிக்க அணியில் ஏபி டிவில்லியர்ஸ் இல்லாத குறையை, குட்டி ஏபி டிவில்லியர்ஸ் ஆன டிவால்ட் பிரிவியஸ் தீர்த்து வைப்பார் என்றும், அவர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தென்னாப்பிரிக்கா அணியில் இடம் பெறுவார் என்றும், அந்த அணியின் முன்னாள் வீரர் ராபின் பீட்டர்சன் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து ராபின் பீட்டர்சன் கூறும் பொழுது ” டிவால்ட் பிரிவியஸ் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தென்னாப்பிரிக்க அணியில் இடம்பெற முடியுமா? என்று கேட்டால், நிச்சயமாக அவரால் முடியும் என்று நான் நம்புகிறேன். அணிக்குள் தற்போது செல்ல வேண்டிய எதற்கு நிறைய கிரிக்கெட் ஆட வேண்டிய தேவைகள் இல்லை. டிவால்ட் பிரிவியஸ் நல்ல ஃபீல்டர் மற்றும் லெக் ஸ்பின் வீசக்கூடிய ஒரு பவுலர். அவர் இந்தியாவின் சூழ்நிலைகளில் விளையாடுவதற்கான எல்லா திறமைகளையும் கொண்டு இருக்கிறார்.

டிவால்ட் பிரிவியஸ் திறமை ஈடு இணையற்றது. அவர் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணிக்காக எலிமினேட்டர் சுற்றில் மிகச் சிறப்பாக விளையாடி வென்று கொடுத்தார். அவரது திறமைக்கு இணையாக இப்பொழுது அவரது கதாபாத்திரமும் மிகச் சிறப்பாக உருவாகி வளர்ந்து வருவதை நீங்கள் பார்க்கலாம். திறமையும் கதாபாத்திரமும் நெருங்க நெருங்க, நாங்கள் ஒரு சிறப்பு வாய்ந்த வீரரை பெறப் போகிறோம். அவர் இந்தியாவில் உலகக்கோப்பையில் தென் ஆப்பிரிக்க அணிக்காக விளையாடுவார்!” என்று கூறியிருக்கிறார்!