மும்பையும் தோனிக்கு ஹோம் கிரவுண்டு தான்; அவரு எந்த கிரவுண்டில் ஆடினாலும் அது ஹோம் கிரவுண்டாக மாறிவிடுகிறது – மும்பை×சிஎஸ்கே போட்டிக்குமுன் கீரன் பொல்லார்ட் பேட்டி!

0
701

கடந்த காலங்களில் சச்சின் டெண்டுல்கருக்கு நடந்ததைப்போல இப்போது தோனிக்கு நடந்து வருகிறது. தோனி எந்த மைதானத்திற்கு சென்றாலும் ஹோம் மைதானம் போல சப்போர்ட் கிடைக்கிறது என்று பேசியுள்ளார் கீரன் பொல்லார்ட்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த வருட ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் குஜராத் அணிக்கு எதிராக விளையாடி தோல்வியை தழுவியது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடிய இரண்டாவது போட்டியில் லக்னோ அணியை வீழ்த்தி 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

- Advertisement -

மூன்றாவது லீக் போட்டியை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக இன்று விளையாடுகிறது. இப்போட்டி வான்கடே மைதானத்தில் நடக்கிறது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தோனிக்கு இருந்த சப்போர்ட் சொல்லித்தான் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. போட்டியின் துவக்கத்திலிருந்து இறுதிவரை ரசிகர்கள் தோனியின் பெயரை மட்டுமே கரகோஷம் எழுப்பி வந்தனர்.

சேப்பாக்கம் மைதானத்தில் மட்டுமல்ல, முதல் போட்டி நடந்த அகமதாபாத் மைதானத்திலும் சொந்த அணிக்கு இருந்ததைவிட தோனிக்கு அதிக சப்போர்ட் இருந்ததை பார்க்க முடிந்தது.

- Advertisement -

இந்நிலையில் மூன்றாவது போட்டி மும்பை மைதானத்தில் நடைபெறுகிறது. மும்பை மற்றும் சென்னை அணிகள் போட்டியளயில் பரம எதிரிகளாக இருந்து வருகின்றன. வான்கடே மைதானத்தில் மும்பை அணிக்கு சப்போர்ட் வானுயர இருக்கும் என்று தெரியும்.

ஆனால் மும்பையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இருக்கும் அளவிற்கு தோனிக்கும் அதே அளவு சப்போர்ட் இருக்கிறது என்று தனது பேட்டியில் குறிப்பிட்டு புகழாரம் சூட்டியுள்ளார் மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் கோச் கீரன் பொல்லார்ட். அவர் பேசியதாவது:

“கடந்த காலங்களில் சச்சின் டெண்டுல்கருக்கு இப்படிப்பட்ட சப்போர்ட் இருந்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன். எந்த மைதானத்திற்கு அவர் சென்றாலும் அங்கு அவருக்கு சொந்த ஊர் மைதானம் போல சப்போர்ட் குவியும். அப்படிப்பட்ட ஒரு சப்போர்ட் இப்போது மகேந்திர சிங் தோனிக்கு கிடைத்து வருவதை பார்க்கிறேன்.

சென்னையில் மட்டுமல்ல, இந்தியாவில் எந்த மைதானத்திற்கு அவர் சென்றாலும் ஹோம் கிரவுண்ட் போல அவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாலும் குவிகிறது. மும்பையிலும் அதுபோல தான் நடக்க உள்ளது. கடந்த சீசன்களிலும் பார்த்திருக்கிறேன்.

இந்த சீசனில் நல்ல ஃபார்மில் இருக்கிறார். டெத் ஓவர்களில் அவருக்கென்று தனி திட்டம் இல்லாமல் நாங்கள் களமிறங்க முடியாது. திட்டமிட்டு வருகிறோம். முதல் போட்டியில் பேட்டிங்கில் போதிய அளவிற்கு செயல்படவில்லை. சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் பேட்டிங்கில் கூடுதல் கவனத்துடன் இருக்கிறோம்.” என்றார்.