எங்க கொண்டு வந்து நிறுத்தி இருக்க பாத்தியா!.. ODI ரேங்கிங்.. கோலி ரோஹித் பெரும் பின்னடைவு.. இசான் கிசான் அசத்தல்

0
2132
ICT

இந்தியா ஆண்கள் கிரிக்கெட் அணியின் வெஸ்ட் இண்டிஸ் சுற்றுப்பயணத்தில் தற்பொழுது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இரண்டும் முடிவடைந்து இருக்கின்றன. டெஸ்ட் தொடரில் ஒரு போட்டி டிராவாக ஒரு போட்டியை வென்றும், ஒரு நாள் தொடரில் ஒரு போட்டியை தோற்று இரண்டு போட்டியில் வென்றும், இரண்டு தொடர்களையும் இந்திய அணி கைப்பற்றி இருக்கிறது!

இதற்கு அடுத்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி இன்று இரவு இந்திய நேரப்படி ஏழு மணிக்கு துவங்குகிறது.

- Advertisement -

நடந்து முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் விளையாடினார்கள். அந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்யாமல் பந்து வீசி வெஸ்ட் இண்டீஸை 114 ரன்கள் சுருட்டிய காரணத்தால், இளம் வீரர்களை பரிசோதிக்கும் வாய்ப்பு வீணானது.

இதன் காரணமாக இரண்டாவது போட்டியில் ரோகித் சர்மா, விராட் கோலி அணியில் சேர்க்கப்படவில்லை. மேலும் மூன்றாவது போட்டியிலும் இதே தான் தொடர்ந்தது. இரண்டாவது போட்டியில் தோற்ற இந்திய அணி மூன்றாவது போட்டியில் சிறப்பாக விளையாடி என்று தொடரையும் கைப்பற்றிக் கொண்டது.

இந்த ஒருநாள் தொடரில் நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் துவக்க வீரராக களம் இறங்கி விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் இசான் கிசான் தொடர்ச்சியாக மூன்று அரை சதங்கள் அடித்தார். மேலும் மூன்றாவது போட்டியில் சிறப்பாக விளையாடிய கில் 85 ரன்கள் எடுத்தார். தொடர் முழுவதும் குல்தீப் யாதவ் பந்துவீச்சு மிகச் சிறப்பாக இருந்தது.

- Advertisement -

இந்த தொடரின் முடிவுக்கு பிறகு ஐசிசி வெளியிட்டுள்ள ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில், இந்திய வீரர்கள் இருந்த இடங்களில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா பின்னடைவை சந்தித்திருக்கிறார்கள். அதேவேளையில் இஷான் கிஷான் முன்னேறி இருக்கிறார். மேலும் சுப்மன் கில் அவருடைய நிரந்தரமான இடத்தில் தொடர்கிறார்.

ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் விராட் கோலி 8வது இடத்தில் இருந்து 9வது இடத்திற்கும், 10வது இடத்தில் இருந்த ரோஹித் சர்மா 11ஆவது இடத்திற்கும் சரிந்திருக்கிறார்கள். மேலும் இசான் கிஷான் 15 இடங்கள் முன்னேறி 45 ஆவது இடத்தில் நீடிக்கிறார். மூன்று ஆட்டங்களில் 7 விக்கெட் வீழ்த்திய குல்தீப் யாதவ் 14வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். சுப்மன் கில் ஏழாவது இடத்தில் இருக்கிறார்.

ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் முதல் 10 இடத்தில் இருப்பவர்கள்.

பாபர் ஆஸம் பாகிஸ்தான் 886 புள்ளிகள்
ராசி வான்டர் டசன் தென் ஆப்பிரிக்கா 777 புள்ளிகள்
பகார் ஜமான் பாகிஸ்தான் 755 புள்ளிகள்
இமாம் உல் ஹக் பாகிஸ்தான் 745 புள்ளிகள்
ஹாரி டெக்டர் அயர்லாந்து 726 புள்ளிகள்
டேவிட் வார்னர் ஆஸ்திரேலியா 726 புள்ளிகள்
சுப்மன் கில் இந்தியா 724 புள்ளிகள்
குயின்டன் டி காக் தென்னாபிரிக்கா 718 புள்ளிகள்
விராட் கோலி இந்தியா 712 புள்ளிகள்
ஸ்டீவ் ஸ்மித் ஆஸ்திரேலியா 710 புள்ளிகள்