“எப்ப தேவையோ அப்ப ஸ்டோக்ஸ் மட்டுமே செய்வார்.. பாகிஸ்தானுக்கு எதிரா பெருசா இருக்கு!” – கேப்டன் பட்லர் பேச்சு!

0
782
Buttler

நடப்பு உலகக் கோப்பைத் தொடர் இங்கிலாந்து அணிக்கு மோசமாக அமைந்திருப்பது நாம் அறிந்ததே. தொடர்ந்து நான்கு தோல்விகள் அடைந்த இங்கிலாந்த அணி, இன்று நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றிருக்கிறது!

இன்றைய போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணிக்கு ஆரம்பத்தில் துவக்கம் கிடைத்தாலும் நடுவில் விக்கெட்டுகள் விழுந்தது. கிடைத்த தொடக்கம் வீணாவது போல் தெரிந்தது.

- Advertisement -

இந்த நிலையில் ஸ்டோக்ஸ் வோக்ஸ் உடன் இணைந்து சிறந்த பார்ட்னர்ஷிப்பை அமைத்து சதம் அடித்தார். வோக்ஸ் அரை சதம் அடித்தார். இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து 339 ரன்கள் எடுத்தது.

இதற்கு அடுத்து பந்துவீச்சில் மிகச் சிறப்பாக செயல்பட்டு நெதர்லாந்து அணியை 179 ரன்களுக்கு சுருட்டி, இங்கிலாந்து அணி இந்த தொடரில் இரண்டாவது வெற்றியை 160 ரன்கள் வித்தியாசத்தில் பதிவு செய்தது.

இந்த வெற்றியின் மூலம் அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான தகுதி பெறுவதற்கான வாய்ப்பையும் அதிகரித்து இருக்கிறது. நீண்ட தோல்வி பயணத்திலிருந்து வந்த இந்த வெற்றியால் இங்கிலாந்து முகாம் தற்போது மகிழ்ச்சி அடைந்து இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் வெற்றிக்குப் பின் பேசிய இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் “வெற்றி பெற மிகவும் ஆசைப்பட்டோம். மலான் எங்களுக்கு ஒரு சிறந்த தொடக்கத்தை கொடுத்தார். ஆனால் நடுவில் ஒரு சரிவு உண்டானது. இந்த இடத்தில் ஸ்டோக்ஸ் மற்றும் வோக்ஸ் இருவரும் மிகச் சிறப்பாக விளையாடி அணியை விட்டனர்.

எங்களுக்கு எப்பொழுதெல்லாம் தேவையோ அப்பொழுதெல்லாம் சிறப்பாக செயல்பட கூடியவராக ஸ்டோக்ஸ் இருந்து வருகிறார். இவர்கள் இருவரும் இன்று மிகவும் புத்திசாலித்தனமாக பேட்டிங் செய்தார்கள். இங்கு 339 ரன்கள் போதும் என்பதாக நாங்கள் நினைத்தோம்.

இந்த உலகக்கோப்பை தொடரில் டாசில் நிறையகுழப்பங்கள் இருந்தது. பொதுவாக இது உலகக் கோப்பை என்பதால் அழுத்தம் இருந்திருக்கலாம். ஆனால் எது எப்படி என்றாலும் நாம் சரியாக விளையாடியிருக்க வேண்டும். நாங்கள் சரியாக விளையாடவில்லை.

கடைசி போட்டியாக கொல்கத்தாவில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுவது மிகப்பெரிய போட்டி. நீண்ட தோல்வியில் இருந்து வெளியே பல உதவி இருக்கும் இந்த வெற்றி அர்த்தமுள்ள ஒன்றாக அமைந்திருக்கிறது!” என்று கூறியிருக்கிறார்!