“என்ன எப்போ சார் இந்தியா டீம் ல எடுப்பீங்க? யார் இந்த பையன் எனக் கேட்ட ரவி சாஸ்திரி- இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் பரத் அருண் பகிர்ந்த சுவாரசியமான தகவல்!

0
2658

இந்திய அணி கடந்த சில ஆண்டுகளாகவே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. விராட் கோலி 2014 ஆம் ஆண்டு இந்திய டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் ஆக நியமிக்கப்பட்டதிலிருந்து இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் உலக அரங்கில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தது .

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு வெளிநாட்டு ஆடுகலங்களிலும் 20 விக்கெட்டுகளை வீழ்த்த தகுதி உடையதாக கட்டமைக்கப்பட்டது . அந்தக் காலகட்டங்களில் இந்திய அணியின் பயிற்சியாளர்களாக இருந்த தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேட்டிங் பயிற்சி அலர் சஞ்சய் பாங்கர் பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண் மற்றும் பீல்டிங் பயிற்சியாளர் ஆர் ஸ்ரீதர் ஆகியோர் மிகவும் திறமையாக செயல்பட்டு வலுவான இந்திய அணியை உருவாக்கினர் .

- Advertisement -

அந்த அணி ஆஸ்திரேலியா இங்கிலாந்து தென் ஆப்பிரிக்கா என சுற்றுப்பயணம் மேற்கொண்ட நாடுகளில் எல்லாம் வெற்றிக் கொடியை நாட்டி வந்தது . ரிஷப் பண்ட் முகமது சிராஜ் போன்ற திறமையான வீரர்களும் இந்த காலகட்டத்தில் இந்திய அணியால் சிறப்பான வீரர்களாக வார்த்தெடுக்கப்பட்டனர். 2020 ஆம் ஆண்டு இந்தியா அணிக்காக தனது டெஸ்ட் கிரிக்கெட்டை ஆரம்பித்த முகம்மது சிராஜ் இன்று இந்திய அணியில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் முக்கிய வேகப்பந்துவீச்சாளராக திகழ்ந்து வருகிறார் இவரைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை கிரிக் பஸ் இணையதளத்தில் பகிர்ந்து இருக்கிறார் முன்னாள் பந்து வீச்சு பயிற்சி பயிற்சியாளர் பரத் அருண் .

முகமது சிராஜின் வளர்ச்சியில் பரத் அருணின் பங்கு முக்கியமானது. சிராஜ் ஹைதராபாத் அணிக்காக ரஞ்சிப் போட்டிகளில் ஆடிய காலகட்டத்தில் இருந்து அவருக்கு பயிற்சியும் ஆதரவும் கொடுத்து வந்தவர் பரத் அருண் . இது பற்றி பேசிய பரத் அருண் ” சிராஜ் சிறப்பாக செயல்பட்டு 2016-17 ரஞ்சி டிராபி போட்டிகளில் 41 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய ஏ அணிக்காக தேர்வு செய்யப்பட்டார். இந்தியையே அணிலும் சிறப்பாக செயல்பட்ட அவர் என்னை அடிக்கடி தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டு எப்போது என்னை இந்தி அணிக்காக தேர்வு செய்வீர்கள் என்று கேட்டுக் கொண்டே இருப்பார் . நான் அவரிடம் இன்னும் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தினால் நிச்சயமாக நீ இந்திய அணியில் இடம் பெறுவாய் என்று கூறி வந்தேன் . என தெரிவித்தார் .

இது பற்றி தொடர்ந்து பேசிய அவர் ” இந்திய ஏ அணிக்காக சிறப்பாக ஆடிய முகமது சிராஜ் 2017 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு டி20 போட்டிகளில் அறிமுகமானார். ஆனால் அதிகப்படியான ரண்களை விட்டுக் கொடுத்ததால் இந்தியா அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார் . பின்னர் 2020 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளின் மூலம் மீண்டும் இந்தியா அணிக்கு வந்த அவர் தனது திறமையான பங்களிப்பின் மூலம் தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டார்” எனக் கூறினார்.

- Advertisement -

இது பற்றி பேசுகையில் ” ஒருமுறை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி என்னை அழைத்து யார் இந்த நபர் அடிக்கடி உனக்கு போன் செய்து நான் எப்போது இந்திய அணியில் இடம் பெறப் போகிறேன் என்று கேட்டுக் கொண்டே இருக்கிறார் என்று கேள்வி எழுப்பினார் . நான் அவரிடம் சிராஜ் பற்றி கூறினேன் . அப்போது ரவி சாஸ்திரி என்னிடம் ” நீ இந்த இளைஞனின் நம்பிக்கையை கண்டிப்பாக பாராட்டியாக வேண்டும் . அவன் தன் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தால் அடிக்கடி உன்னை தொடர்பு கொண்டு எப்போது இந்திய அணியில் இடம் பெறப் போகிறேன் என்று கேட்டுக் கொண்டிருப்பான்” என பாராட்டினார் . என்று தெரிவித்தார் பரத் அருண் ,