சூரியகுமார் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எப்போது திரும்புவார்?.. உடனே விளையாடுவாரா – வெளியான தகவல்கள்

0
617
Surya

2024 நடப்பு 17 வது ஐபிஎல் சீசனில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளிடம் தோல்வி அடைந்திருக்கிறது. விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்து, புள்ளிகள் ஏதும் பெறாமல் இருந்து வருகிறது.

நடந்து முடிந்த ஐபிஎல் மினி ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை வென்றால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று கணிக்கப்பட்டது. ஹர்திக் பாண்டியா மீண்டும் அந்த அணிக்கு உள்ளே வந்ததும், தேவையான இடங்களுக்கு மிகச் சரியான வீரர்களை ஐபிஎல் மினி ஏலத்தில் வாங்கியதும், அந்த அணியை மிகவும் பலமான அணியாக பேப்பரில் காட்டியது.

- Advertisement -

இந்த நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் வெல்லக்கூடிய மிக அதிக வாய்ப்பில் இருந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வி அடைந்து அதிர்ச்சி கொடுத்தது. மேலும் அவர்களுடைய பிளேயிங் லெவன் தவறாக இருக்கிறது என்று அப்பொழுதே விமர்சனங்கள் வந்தது. மேலும் ஹார்திக் பாண்டியா பும்ராவை மிக தாமதமாக பயன்படுத்துகிறார் என்கின்ற விமர்சனமும் இருந்தது. இந்த நிலையில் இப்படியான தவறுகளால் மீண்டும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் மும்பை அணி தோல்வி அடைந்திருக்கிறது.

தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் யூனிட்டுக்கு மிகப்பெரிய பலமாக சூரியகுமார் யாதவ் இருந்து வருகிறார். ஆனால் நடப்பு ஐபிஎல் தொடருக்கு முன்பாக ஹெர்னியா அறுவை சிகிச்சை செய்திருப்பதால், பிசிசிஐ அவரை மிகுந்த கவனத்துடன் கவனித்துக் கொண்டு வருகிறது. அவர் தற்பொழுது இதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்து கொண்டிருக்கிறார். எனவே அடுத்து அவர் எப்போது விளையாடுவார் என்பது குறித்து பிசிசிஐ தரப்பிலிருந்து சில செய்திகள் வெளியாகி இருக்கிறது.

பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறும்பொழுது “சூரியகுமார் தற்போது நல்ல முன்னேற்றம் அடைந்து வருகிறார். அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மிக விரைவில் விளையாடுவார். முதல் இரண்டு போட்டியை தவறவிட்ட அவர், மேலும் சில போட்டிகளுக்கு அணிக்கு வெளியில் அமர்ந்திருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. பிசிஐஐயை பொறுத்த வரையில் அவர் டி20 உலகக் கோப்பையில் விளையாட வேண்டும் என்பதுதான் கவலையாக இருக்கிறது. எனவே இதற்காக அவரது உடல் நிலையை மிகுந்த கவனத்துடன் அணுகி வருகிறது. ஹெர்னியா அறுவை சிகிச்சை செய்திருக்கும் அவரை இதன் காரணமாகத்தான் ஐபிஎல் தொடருக்கு அவசரப் படுத்தவில்லை” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : ஜெய்ஸ்வால் துருவ் ஜுரல் மாதிரி இந்த பையன் வருவான்.. ரொம்ப கஷ்டமான வேலையை செஞ்சான் – சங்கக்கரா பேச்சு

ஒருவேளை அவர் உடல் தகுதி பெறுவதில் கால தாமதம் ஏற்படும் என்றால், பிசிசிஐ நிச்சயம் டி20 உலகக் கோப்பையை மனதில் வைத்து, சூரியகுமார் யாதவை ஐபிஎல் தொடரில் விளையாட விடாது. மேலும் பும்ராவுக்கும் இடையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஓய்வு தர வேண்டும் என்று பிசிசிஐ அறிவுறுத்தி இருப்பதாகவும் ஒரு செய்தி கூறுகிறது. மொத்தத்தில் நடப்பு ஐபிஎல் தொடரில் டி20 உலகக் கோப்பையில் இடம் பெற வாய்ப்பு இருக்கும் எல்லா வீரர்களும் பிசிசிஐ மூலம் நெருக்கமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள் என்பது உறுதியாகிறது.