ஜெய்ஸ்வால் துருவ் ஜுரல் மாதிரி இந்த பையன் வருவான்.. ரொம்ப கஷ்டமான வேலையை செஞ்சான் – சங்கக்கரா பேச்சு

0
478
Jaiswal

இன்று ஐபிஎல் தொடரின் ஒன்பதாவது போட்டியில் ராஜஸ்தான் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்த்து விளையாடியிருக்கிறது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி தனது முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக தோல்வி அடைந்திருந்தது.

சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி கட்டத்தில் சந்திப் சர்மாவின் அற்புதமான பந்து வீச்சு காரணமாக 20 ரன்கள் வித்தியாசத்தில் தனது முதல் போட்டியில் வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கில் 82 ரன்கள் எடுத்திருந்தார். இவருடன் நான்காவது இடத்தில் வந்து விளையாடிய ரியான் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். இந்த ஜோடி மொத்தம் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் இலங்கையைச் சேர்ந்த குமார் சங்கக்கரா நடப்பு ஐபிஎல் சீசனில் இரண்டு முக்கிய மாற்றங்களை அணியில் செய்திருக்கிறார். சஞ்சு சாம்சன் கொஞ்சம் நேரம் எடுத்து களத்தில் நின்று விளையாட வேண்டும் என்பதும்,  நான்காவது இடத்தில் தொடர்ச்சியாக ரியான் பராக் விளையாட வேண்டும் என்பதும் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. முதல் போட்டியில் இந்த முடிவு நல்லதாக்கத்தையும் ஏற்படுத்தியிருந்தது.

இது குறித்து குமார் சங்கக்கரா கூறும்பொழுது “ரியான் பராக் எங்களுக்காக விளையாடக்கூடியதில் அவருக்கு எல்லா பங்கும் இருப்பதாக நாங்கள் உணர்ந்தோம். மேலும் நடப்பு ஐபிஎலசீசனுக்காக மேற்கொண்ட உழைப்பு, மற்றும் உள்நாட்டு போட்டிகளில் அவர் செயல்பட்டு இருந்த அபாரமான விதம், இவற்றின் காரணமாக நாங்கள் அவருக்கு தொடர்ச்சியாக பிளேயிங் லெவனில் நான்காவது இடத்தை பேட்டிங் வரிசையில் கொடுப்பது என்று முடிவு செய்தோம். மேலும் தொடர்ச்சியாக கடைசி கட்டத்தில் வந்து ரன்கள் குவிக்கும் கடினமான வேலையை, இளம் வீரர் தொடர்ந்து செய்வது கடினமானது.

- Advertisement -

இதையும் படிங்க : நாங்களா இருக்கவும் 246 ரன் எடுத்தோம்.. ஸ்ட்ராங்கா இருக்கிறதுதான் பிரச்சனை – ஹர்திக் பாண்டியா பேட்டி

ரியான் பராக் தற்பொழுது கூட மிகவும் இளம் வீரர் என்பதை நாம் மறக்கக்கூடாது. ஆனால் பல காலமாக இந்த அணியின் முகமாகவும், இளம் படையணியின் முகமாகவும் இருந்து வந்திருக்கிறார்.  மேலும் ஜெய்ஸ்வால் மற்றும் துருவ் ஜுரல் போன்றவர்களின் பெரிய பாய்ச்சல்களை அவர் பார்த்திருக்கிறார். இப்போது அவர் இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வாவதற்கான பசி மற்றும் முன் உதாரணமாக ஜெய்ஸ்வால், ஜுரல் போன்றவர்கள் இருக்கிறார்கள். அவர் இதைப் பின்பற்றி பெரிய இடத்திற்கு செல்ல முடியும்” என்று கூறியிருக்கிறார்.