ஆர்.சி.பி சிராஜை கைவிட இருந்த பொழுது விராட்தான் காப்பாற்றினார் ; தினேஷ் கார்த்திக் ஆச்சரிய தகவல்!

0
491
DK

இந்திய அணியின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் தற்பொழுது ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம் பெற்று விளையாடுகிறார்!

இதற்கு முன்னதாக தினேஷ் கார்த்திக் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மணிக்கு கேப்டனாக இருந்து பின்பு வீரராக விளையாடி, சென்ற ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்தின் போது கொல்கத்தா அணியால் கழட்டி விடப்பட்டு பெங்களூர் அணிக்கு வந்தார்!

- Advertisement -

தற்பொழுது அவர் கொல்கத்தா அணியில் 2020 ஆம் ஆண்டு விளையாடிய பொழுது பெங்களூரு அணியில் சிராஜ்காக விராட் கோலி தந்த மிகப்பெரிய ஆதரவு ஒன்றை வெளியிட்டு பேசியிருக்கிறார்!

இது பற்றி தினேஷ் கார்த்திக் கூறும் பொழுது ” முகமது சிராஜ் விராட் கோலியை மூத்த சகோதரர் போல தனக்கு வழிகாட்டும் வெளிச்சமாக பார்க்கிறார் என்று நினைக்கிறேன். அவரது கடினமான காலங்களில் விராட் கோலி அவரை ஆதரித்தார். அதை முகமது சிராஜ் மிகவும் மதிக்கிறார். விராட் கோலியின் கேப்டன்சியின் கீழ் அவர் மீண்டும் அணிக்கு திரும்பியதும், அதனால் அவர் விராட் கோலியை தன் வாழ்க்கையில் மிக முக்கியமான நபராக எண்ணுகிறார். அவர் வாழ்க்கையில் மிகவும் மதிக்கும் இரண்டு நபர்கள் ஒன்று விராட் கோலி மற்றொன்று பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண்!” என்று கூறியிருக்கிறார்!

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” ஹைதராபாத் அணியில் அவர் ஆரம்பத்தில் வளர்ந்த காலங்களில் பரத் அருண் அங்கு பயிற்சியாளராக இருந்தார். அந்த நேரத்தில் அவர் மிகச் சிறந்த முறையில் உருவாக அவரை பரத் வழி நடத்தினார். விராட் கோலி அவருக்கு மிகவும் முக்கிய சக்தியாக விளங்கியவர்!” என்று கூறியுள்ளார்!

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய தினேஷ் கார்த்திக் ” தொற்று காலம் முடிந்து 2020 ஆம் ஆண்டு முகமது சிராஜ் சிறப்பாக திரும்பி வந்தார். அப்பொழுது நான் கொல்கத்தாவில் விளையாடிய காலத்தில் ஒரு போட்டியில் எங்களை நூறு ரண்களுக்கு கீழ் சுருட்டி அதில் மூன்று விக்கட்டுகளை முகமது சிராஜ் வீழ்த்தி இருந்து ஆட்டநாயகன் விருதைப் பெற்றார். அங்கிருந்து அவரது கிரிக்கெட் வாழ்க்கை சுமுகமாக நகரத் தொடங்கியது. அதற்கு முன்பு ஆர்சிபி அணி அவரை கைவிட தயாராக இருந்த பொழுது, விராட் கோலி விளையாடும் லெவனில் முகமது சிராஜை கட்டாயம் வேண்டும் என்று சொல்லி விளையாட வைத்தார். மேலும் சமூகத்தின் அந்த அடுக்குகளில் இருந்து வந்து அவர் இந்த அளவுக்கு சாதித்து ஒரு முன் உதாரண வீரராக இருப்பதைப் பார்க்க எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்!