இந்தியா ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே தற்பொழுது ஜிம்பாப்வே நாட்டில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இந்த தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய இளம் வீரர் அபிஷேக் சர்மா சதம் அடித்திருந்தார். இருந்தபோதிலும் தொடர்ந்து அவர் சிறப்பாக விளையாட வேண்டிய அவசியத்தை மறைமுகமாக ஆன்டி பிளவர் எச்சரிக்கை செய்திருக்கிறார்.
அபிஷேக் ஷர்மா ஐபிஎல் தொடரில் 200க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி 484 ரன்கள் குவித்து மிகப்பெரிய பிளாஸ்டர் ஆக வந்தார். மாறிவரும் டி20 கிரிக்கெட்டுக்கு இந்திய அணிக்கு அவர் தேவையானவராக தெரிகிறார். முதல் போட்டியில் சிக்சர் அடிக்க ஆசைப்பட்டு டக் அவுட் ஆனார். இரண்டாவது போட்டி ஹாட்ரிக் சிக்சர் அடித்து சதத்தைக் கடந்தார்.
இப்படி இந்த இளம் வீரர் தனிப்பட்ட முறையில் ரன் அடிப்பதற்கான எந்த சுயநலமும் இல்லாமல் அணிக்காக அதிரடியாக விளையாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இவருக்கு வெளியில் இருந்து நிறைய பாராட்டுக்கள் முன்னாள் வீரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இப்படியான நிலையில்தான் ஆன்டி பிளவர் ஒரு முக்கிய எச்சரிக்கையை மறைமுகமாக செய்திருக்கிறார்.
இது குறித்து ஆன்டி பிளவர் கூறும்பொழுது “தற்பொழுது ஜெய்ஸ்
வால் இந்திய அணிக்கு திரும்பி வருகிறார் இல்லையா. அபிஷேக் ஷர்மாவுடன் அவரும் சேர்ந்து விளையாடுகின்ற போட்டியைதான் இந்திய கிரிக்கெட் தேர்வாளர்களும், இந்திய அணி பின்தொடரக்கூடிய ஒட்டுமொத்த ரசிகர்களும் பெரிய அளவில் விரும்புவார்கள். இந்திய அணிக்கு இதுபோன்ற பலவீரர்கள் இருப்பதால், இது சுவாரஸ்யமானதாகவும் சிறப்பானதாகவும் இருக்கிறது.
ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பான முறையில் ரன்கள் எடுத்து வந்தது மற்றும் தற்பொழுது சதம் அடித்து இருப்பது அவருடைய நம்பிக்கையை பெரிய அளவில் அதிகரித்திருக்கும். இளம்வீரராக ரன்கள் எடுப்பது மிகவும் முக்கியம். அது அவருடைய தன்னம்பிக்கையை அதிகரிக்கும். நான் இந்தத் தொடரில் மேற்கொண்டு அபிஷேக் ஷர்மாவை பார்க்க ஆவலாக இருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : நாளை 3வது டி20.. புதிதாக வந்த 3 பேர்.. உத்தேச இந்திய பிளேயிங் XI.. கில்லின் வியூகம் எப்படி இருக்கும்?
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் டேவிட் வார்னர் மற்றும் டிராவிஸ் ஹெட் போல இந்திய டி20 கிரிக்கெட் அணிக்கு அபிஷேக் ஷர்மா மற்றும் ஜெய்ஸ்வால் விளையாட வேண்டும் என்று பெரிதும் விரும்புகிறார்கள். கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் கில் வேண்டாம் இந்த ஜோடியை களம் இறக்க வேண்டும் என்று பேசி வருவது குறிப்பிடத்தக்கது!