இந்திய அணி சுப்மன் கில் தலைமையில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்கு தற்போது ஜிம்பாப்வே நாட்டிற்குச் சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இந்த தொடரில் முதலில் நடைபெற்ற இரண்டு போட்டிகளில் இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று இருக்கின்றன. இந்த நிலையில் நாளை மூன்றாவது போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கான வலிமையான உத்தேச இந்திய பிளேயிங் லெவனை பார்க்கலாம்.
டி20 உலகக் கோப்பையை வென்று இந்தியா திரும்புவதற்கு தாமதமான காரணத்தினால் முதல் இரண்டு போட்டிகளுக்கு அணியில் இடம் பெறாத ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் மற்றும் சிவம் துபே மூவரும் தற்பொழுது அணிக்கு திரும்பியிருக்கிறார்கள். இதன் காரணமாக யாருக்கு வாய்ப்பு கொடுப்பது என்பது கேப்டன் சுப்மன் கில்லுக்கு பெரிய தலைவலியாக மாறியிருக்கிறது.
கடந்த இரண்டாவது டி20 போட்டியில் இளம் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா அதிரடி சதம் அடித்தார். மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்த ருதுராஜ் சிறப்பாக விளையாடி 77 ரன்கள் எடுத்தார். மேலும் ரிங்கு சிங் பினிஷர் ஆக 48 ரன்கள் எடுத்தார். பேட்டிங் யூனிட்டில் இவர்கள் மூவரையுமே மாற்றுவது கடினம்.
அதே சமயத்தில் இளம் வீரரான ரியான் பராக் மற்றும் துருவ் ஜுரல் இருவருக்குமே இரண்டாவது போட்டியில் பேட்டிங் செய்ய வாய்ப்பே கிடைக்கவில்லை. இவர்களையும் உடனடியாக அணியில் இருந்து நீக்க முடியாது. எனவே எந்த ஒரு போட்டிக்கு மட்டும் பழைய அணிக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்க இந்திய கிரிக்கெட் நிர்வாகம் நினைக்கலாம்.
இல்லையென்றால் துருவ் ஜுரல் இடத்தில் சஞ்சு சாம்சன் களம் இறக்கப்படலாம். ஜெய்ஸ்வால் ஒரு போட்டி தாமதமாக நான்காவது மற்றும் ஐந்தாவது டி20-ல் விளையாடலாம். சிவம் துபே ஏற்கனவே டி20 உலகக் கோப்பையின் எல்லாப் போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார் என்பதால் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படாமலும் விடலாம். இத்தோடு கடைசி இரண்டு போட்டிகளில் கேப்டன் கில் ஓய்வெடுக்க வாய்ப்பு இருக்கிறது.
இதையும் படிங்க : 203 ரன்கள்.. டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் டூ பிளஸ்ஸிஸ் அதிரடி சதம்.. மழையால் வந்த வினை.. ஹெட் ஸ்மித் அதிரடி வீண்
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டிக்கான இந்திய உத்தேச பிளேயிங் லெவன் :
அபிஷேக் ஷர்மா, சுப்மன் கில், ருதுராஜ், சஞ்சு சாம்சன், ரியான் பராக், ரிங்கு சிங், துருவ் ஜுரல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஸ்னாய், ஆவேஸ் கான் மற்றும் முகேஷ் குமார்






