“என்னோட கமென்டரி கேட்டுட்டு, தலைவன் தோனி கால் பண்ணி பேசினார்; எனக்கு அந்த நேரத்தில்..” – தினேஷ் கார்த்திக் உருக்கம்!

0
657

நான் கமெண்ட்ரி செய்ததை கேட்டுவிட்டு, தோனி போனில் அழைத்து என்னிடம் பேசினார் என மகிழ்ச்சியுடன் உருக்கமாக பகிர்ந்து உள்ளார் தினேஷ் கார்த்திக்.

2019 ஆம் ஆண்டு 50-ஓவர் உலகக் கோப்பைக்கு பிறகு சில முன்னணி இந்திய வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டனர். மகேந்திர சிங் தோனி, சுரேஷ் ரெய்னா போன்றோர் ஓய்வு முடிவையும் அறிவித்துவிட்டனர்.

- Advertisement -

விடாமுயற்சியுடன் இருந்த தினேஷ் கார்த்திக் ஐபிஎல் போட்டிகளில் நன்றாக விளையாடி மீண்டும் இந்திய டி20 அணியில் இடம் பிடித்தார். ஆனால் இவர் 2019 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இடம்பெற முடியாமல் தவித்து வந்தார்.

அந்த காலகட்டத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு கமெண்டரியும் செய்து வந்தார். குறிப்பிடத்தக்க விதமாக, 2021 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு இவர் கமெண்ட்ரி செய்தார்.

பின்னர் ஐபிஎல் ஏலத்தில் ஆர்.சி.பி அணிக்கு கீப்பிங் மற்றும் பினிஷிங் ரோலுக்கு எடுக்கப்பட்டார். அதில் அபாரமாக செயல்பட்டு 2022 ஆம் ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பையிலும் இடம் பிடித்து விளையாடினார். அதன் பிறகு இந்திய அணியில் இடம்கிடைக்காததால், மீண்டும் கமெண்டரி செய்வதற்கு வந்துவிட்டார். தற்போது பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் கமெண்ட்டரி செய்து வருகிறார்

- Advertisement -

இந்நிலையில் தினேஷ் கார்த்திக் ஆர் சி பி அணிக்கு அளித்த பேட்டியில் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அவர் பேசியதாவது:

நான் கமென்டரியை மிகவும் மகிழ்வுடன் செய்தேன். கிரிக்கெட் பற்றி பேசுவதற்கே பிடிக்கும். மேலும் அதை ஆராய்ந்து நுணுக்கங்களை பற்றி மக்களிடம் பேசுவதற்கு இன்னும் மகிழ்ச்சியாக இருந்தது. கமெண்ட் செய்யும் பொழுது நான் மிகப்பெரிய சாதனையாக பார்த்தது நான் குறைந்தபட்ச எதிர்பார்ப்பை வைத்திருக்கும் தோனியிடமிருந்து பெற்ற வாழ்த்து தான். “உனது கமெண்டரியை நான் மிகவும் எஞ்சாய் செய்தேன். நன்றாக செய்து வருகிறாய். தொடர்ந்து செய்.” என்று தோனி என்னிடம் கூறினார். இதை இன்றளவும் என்னால் மறக்க இயலாது.” என்றார்.