” கடந்த வாரம் இந்த வீரரை நான் பார்த்தபோது இந்த வீரர் தான் ஆஸ்திரேலியா அணிக்கு மிகப்பெரிய ஆபத்து என எனக்கு தெரியும்” – தனது கணிப்பு பற்றி ரிக்கி பாண்டிங் பேட்டி!

0
2618

ஆஸ்திரேலியா அணியானது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து தற்போது நான்கு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது . இந்த இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த ஒன்பதாம் தேதி நாக்பூரில் தொடங்கியது . இந்தப் போட்டி மூன்று நாட்களிலேயே முடிவடைந்தது . இந்தியா இந்தப் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்றது .

இந்த டெஸ்ட் போட்டியின் ஆஸ்திரேலியா அணியின் முதல் இன்னிங்ஸில் ரவீந்திர ஜடேஜா சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார் . இந்திய அணியின் பேட்டிங்கின் போது இவர் 70 ரன்கள் அடித்திருந்தார் . மேலும் இரண்டாவது இன்னிங்ஸிலும் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார் . இவருடைய சிறப்பான ஆட்டத்தின் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் இவருக்கு ஆட்டநாயகன் வருது வழங்கப்பட்டது .

- Advertisement -

இந்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டனும் டெல்லி கேப்பிட்டல் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் இதுகுறித்து தனது கருத்தை பதிவு செய்து இருக்கிறார் . இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள அவர் ” ரவீந்திர ஜடேஜா ஆஸ்திரேலியா அணிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பார் என நான் இந்த டெஸ்ட் போட்டி துவங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே கணித்துக் கூறியிருந்தேன் . அப்படியே இது நடந்திருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார் .

மேலும் இது பற்றி தொடர்ந்து பேசி இருக்கும் அவர் ” காயம் காரணமாக நீண்ட நாட்கள் கிரிக்கெட் ஆடாமல் இருந்த ஜடேஜா சில தினங்களுக்கு முன்பு ரஞ்சிக் கோப்பை போட்டியில் சென்னை அணிக்கு எதிராக விளையாடி ஏழு விக்கெட்டுகளை கைப்பற்றினார் . அந்தப் போட்டியில் அவர் பந்து வீசிய விதம் மிகவும் அச்சுறுத்தலாக இருந்தது . அதை வைத்து தான் நான் கூறினேன் . அவர் ஆஸ்திரேலியா அணிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கப் போகிறார் என்று . மேலும் இது போன்ற மெதுவான ஆடுகளங்களில் அவர் பந்து வீசும் வேகம் மற்றும் அவரது துல்லியம் இந்த இரண்டும் மிகவும் ஆபத்தானவை”எனக் குறிப்பிட்டார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் இந்தப் போட்டியில் ஸ்டீவன் ஸ்மித் ஆட்டம் இழந்த விதத்தை பார்க்கும்போது நமக்கு ஒரு விஷயம் நன்றாக விளங்கும் . ஜடேஜா ஒரே மாதிரியான இரண்டு பந்துகளை வீசுகிறார் . அவற்றில் ஒரு பந்து வீசிய கோணத்தில் ஸ்டெம்புகளை நோக்கி உள்ளே வரும் மற்றொரு பந்து சூழலின் காரணமாக மட்டையை விட்டு விலகிச் செல்லும் . மெதுவான ஆடுகளங்களில் இந்த பந்துகள் மிகவும் ஆபத்தானவை”என குறிப்பிட்டார் பாண்டிங்.

- Advertisement -

“துல்லியமாக ஒரே இடத்தில் ஸ்டம்புகளை நோக்கி தொடர்ச்சியான முறையில் பந்துகளை வீசுகிறார் . இதனால் அவர் மிகவும் ஆபத்தானவர் . மேலும் காயங்கள் எதுவும் இன்றி இந்த நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் அவர் விளையாடினால் இந்தப் போட்டி தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக ரவீந்திர ஜடேஜா இருப்பார்”எனக் கூறி முடித்தார் பாண்டிங்