“நான் ஐபிஎல்ல இந்த பையனை பார்த்ததுமே வேற லெவலா வருவானு நினைச்சேன்!” – இந்திய இளம் வீரரை கணித்த ஏபி டிவில்லியர்ஸ்!|

0
1146
devilliers

அதிநவீன கிரிக்கெட் காலத்தில் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக பார்க்கப்படுகிற தென்னாப்பிரிக்க அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஏபி டிவில்லியர்ஸ் இன்று நிறைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்!

இந்த வகையில் ஐபிஎல் தொடரில் இந்திய இளம் வீரர் ஒருவரின் பேட்டிங்கை முதல் முறையாக பார்த்த பொழுதே, அவரிடம் ஏதோ சிறப்பான விஷயங்கள் இருப்பதாக தான் நினைத்ததாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

உலக கிரிக்கெட்டில் சர்வதேச அளவில் இந்திய அணி உலகக் கோப்பை தொடர்களை வெல்லாவிட்டாலும், நிறைய இளம் வீரர்களை கொண்டுள்ள நாடாக இந்தியா விளங்கி வருகிறது என்பது முக்கியமானது.

இந்த வகையில் தற்பொழுது வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு ஒரு அணி கிளம்பி சுற்றுப்பயணம் சென்றிருக்கும் நிலையில், அவர்கள் பெரும்பான்மையானோர் இல்லாத ஒரு அணி ஆசிய விளையாட்டுப் போட்டிக்காக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதே சமயத்தில் வளர்ந்து வரும் ஆசிய வீரர்களுக்கான தொடரில், முற்றிலும் இளம்பிறர்கள் கொண்ட ஒரு அணி மிக சிறப்பாக தற்பொழுது விளையாடுகிறது. இப்படி இந்தியாவில் இளம் கிரிக்கெட் திறமைகள் எக்கச்சக்கமாக இருக்கிறது.

தற்பொழுது இதுகுறித்து பேசி உள்ள ஏபி டிவில்லியர்ஸ் ஜெய்ஸ்வால் குறித்து கூறுகையில் ” ஒரு இளைஞன் முதல் டெஸ்ட் போட்டியிலேயே வெளியேறி வந்து சதம் அடிப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. இது தினம் தினம் நடக்காது. அவர் ஐபிஎல் தொடரில் விளையாடுவதை முதல்முறையாக பார்த்த பொழுதே அவரிடம் சிறப்பான விஷயங்கள் இருப்பதாக நான் நினைத்தேன்.

- Advertisement -

அவர் ஒரு பந்தை சந்தித்து விளையாடுவதற்கு நிறைய நேரம் இருக்கிறது. அவர் நிறைய நேரத்துடன் விளையாடுகிறார். அவரை வேகம் தொந்தரவு செய்யக் கூடிய ஒரு விஷயமாக இருக்காது. போலவே அவர் சுழற் பந்து வீச்சிலும் மிகுந்த நேரத்தை கொண்டு உள்ளார்.

அவருக்கு கிடைத்த வாய்ப்பு மற்ற வீரர்களை காட்டிலும் மிகச் சீக்கிரத்தில் கிடைத்து விட்டதாக இருந்தாலும், அவரது திறமையின் அடிப்படையில் அவருக்கு வாய்ப்பு தர முடிவு எடுத்து விட்டதாக தெரிகிறது. அவர் எதிர்கால இந்திய கிரிக்கெட்டுகான மிகச்சிறந்த வீரர். அவர் தனது முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்ததை கண்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்” என்று கூறியிருக்கிறார்.

இதேபோல் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா 2019 ஆம் ஆண்டே ஜெய்ஸ்வால் மிகத் திறமையான வீரர் அவருக்கு இந்திய கிரிக்கெட்டில் மிகப்பெரிய எதிர்காலம் இருப்பதாக தெரிவித்துள்ளதை தற்பொழுது சுட்டிக்காட்டி பேசி இருக்கிறார்.