நான் எதிர்பார்க்காதப்ப சச்சின் பாஜி என்னைக் கூப்பிட்டார்; அவர் சொன்னதுதான் என் கிரிக்கெட் வாழ்க்கையை மாற்றியது – ரகானே சிறப்பு பேட்டி!

0
9792
Rahane

கிரிக்கெட்டின் கடவுள் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் சச்சின் டெண்டுல்கர் இன்று தனது 50ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்த இந்த நாளில் அவரது ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் இந்நாள் வீரர்கள் என வாழ்த்து மழை சமூக வலைதளங்களில் பொழிந்து கொண்டிருக்கிறது!

சக மும்பை வீரரான ரகானே சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்ற பொழுது தனக்கு வழங்கிய அறிவுரையை எடுத்து தற்போது அவரது பிறந்தநாளில் பேசியிருக்கிறார். மேலும் ஆஸ்திரேலியாவில் இந்திய அணியை வழிநடத்தி டெஸ்ட் தொடரை வென்ற பொழுது சதம் அடித்ததற்கு சச்சின் எப்படி ஊக்க சக்தியாக இருந்தார் என்றும் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து ரகானே பேசுகையில்
” அப்போது சச்சின் பாஜிக்கு நாங்கள் கொஞ்சம் இடம் கொடுக்க நினைத்திருந்தோம். ஆனால் அவர் என்னை அழைத்த பொழுது நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன். பாஜி என்னை மிகவும் அருகில் இருந்து பார்த்து இதைச் சொன்னார் ‘ உன்னை எனக்கு பல ஆண்டுகளாகத் தெரியும். உன்னை நிறைய பார்த்திருக்கிறேன். விளையாட்டை நீ நேசித்து ஒரு பக்தராக இருந்து கிரிக்கெட்டில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருகிறாய்!” என்று கூறினார்!

தொடர்ந்து பேசிய அவர் ” சச்சின் பாஜி தொடர்ந்து ‘ உங்கள் வாழ்க்கையில் இதுவரை நடந்ததை நீங்கள் கடினமாக உணரலாம். ஆனால் நீங்கள் தொடர்ந்து நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். உங்களுக்கென்று ஒரு வாய்ப்பு கிடைக்கும். அப்பொழுது அதை இரண்டு கைகளால் பற்றிக்கொள்ள வேண்டும். இப்போதைக்கு நீங்கள் இதை ஒரு கொடூரமான விளையாட்டாக நினைக்கலாம். ஆனால் நீங்கள் எப்போதும் செய்தது போலவே தொடர்ந்து விளையாட்டுக்கு சேவை செய்தால் எதிர்காலத்தில் விளையாட்டு உங்களை நன்றாக கவனித்துக் கொள்ளும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்’ என்று கூறினார்” என்று தெரிவித்தார்!

மேலும் தொடர்ந்து பேசிய ரகானே
” ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரில் ஒரு கேப்டனாக நான் அணியை முன் நின்று வழிநடத்த வேண்டி இருந்தது. ஒரு இளம் அணி வலிமை பெற கேப்டன் கோல் அடிக்க வேண்டும். அப்போதுதான் என் எண்ணம் சச்சின் பாஜி பக்கம் திரும்பியது. அவர் 99 இல் எம்.சிஜியில் சதம் அடித்தார். நான் இன்றும் அவரது சிறந்த ஆட்டங்களில் ஒன்றாக அதை நினைக்கிறேன். நான் சதம் அடித்த போட்டியில் அந்த ஆட்டத்திற்குள் களத்திற்கு நுழையும் முன் சச்சின் பாஜி ஆட்டத்தை ஒரு ஐந்தாறு முறையாவது பார்த்திருப்பேன். எனக்கு அந்த போட்டியில் சதம் அடிக்க அதுவே ஊக்க சக்தியாக தூண்டுகோலாக இருந்தது!” என்று கூறி இருக்கிறார்!

- Advertisement -