ரஹானே வேண்டாம் என்று சொன்னவர்கள் இப்போது எங்கே முகத்தை வைத்துக்கொள்வார்கள்? இந்தியாவின் கதி பைனலில் என்னவாகியிருக்கும்? – முன்னாள் வீரர் சாடல்!

0
666

“ரகானேவின் இந்த அதிரடியான ஆட்டம் தொடரவேண்டும். அவரை வேறு மாதிரியான வீரராக காட்டுகிறது. அவரை அடுத்தடுத்த தொடர்களில் எடுக்கவேண்டும்.” என்று கருத்து தெரிவித்திருக்கிறார் வாசிம் ஜாஃபர்.

நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இந்திய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியை தழுவியது. கோப்பையை வெல்லும் வாய்ப்பை தொடர்ந்து இரண்டாவது முறையாக நழுவவிட்டது. கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியை சந்தித்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

கடந்த முறை நடந்த பைனலிலும் இந்திய அணிக்காக ரகானே சிறப்பாக விளையாடி கொடுத்தார். அப்போது இவருக்கு போதிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. அடுத்த ஆறு மாதங்களில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டார். கடைசியாக 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் விளையாடினார். அதன் பிறகு கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட நாட்களுக்கு டெஸ்ட் போட்டிகள் விளையாடாமல் இருந்தார்.

ஐபிஎல் போட்டிகளில் அதிரடியாக விளையாடி தனது மற்றொரு பக்கத்தை காட்டினார். ஐபிஎல் போட்டிகளுக்கு முன்னர் உள்ளூர் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடினார். இதனால் பிசிசிஐ இவரை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு எடுத்தது. எடுத்ததற்கு பிரதிபலனாக முதல் இன்னிசில் 89 ரன்கள் இரண்டாவது இன்னிங்சில் 46 ரன்கள் என இக்கட்டான சூழல்களில் இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டு நல்ல ஸ்கோருக்கு எடுத்துச் சென்றார். பேட்டிங்கில் மற்ற வீரர்கள் பெரிதாக சோபிக்கவில்லை என்பதால் இந்திய அணி தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் ரகானே தனது இந்த அதிரடியான அணுகுமுறையை தொடர்ந்து எடுத்துச் செல்ல வேண்டும். இது இந்திய அணிக்கு சாதகமாக அமையும் என்கிறவாறு கருத்து தெரிவித்திருக்கிறார் வாசிம் ஜாபர்.

- Advertisement -

“ரகானேவின் இந்த புதிய அணுகுமுறை அவரை மாறுபட்ட வீரராக காட்டுகிறது. தொடர்ந்து இந்த அட்டாக் அணுகுமுறையை அவர் வெளிப்படுத்த வேண்டும். இந்திய அணிக்கும் அது மிகப்பெரிய சாதகமாக அமைந்து வருகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இரண்டு இன்னிங்சிலும் அவர் வெளிப்படுத்திய ஆட்டம் மற்றும் அழுத்தங்களை அவர் சிறப்பாக கையாண்ட விதம் இரண்டும் மிகுந்த நம்பிக்கை கொடுத்தது. இரண்டு இன்னிங்ஸிலும் அவர் களமிறங்கியபோது இந்திய அணி இக்கட்டான சூழலில் இருந்தது. மிகப் பெரிய ஸ்கோரை கடக்க வேண்டியது இருந்தது. இரண்டிலும் தனது பொறுமையை வெளிப்படுத்தி எப்பேர்ப்பட்ட அனுபவமிக்க வீரர் என்பதை நிருபித்து விட்டார்.

அவரைப் போன்ற வீரரை பார்மில் இருந்தாலும் இல்லையென்றாலும் அணியை விட்டு வெளியேற்றுவது சரியாக இருக்காது. பலரும் இவரை வேண்டாம் என்றார்கள். ஆனால் இப்போது அவர்கள் எல்லாம் எங்கே என்றே தெரியவில்லை. ஆகையால் வீரரின் ஃபார்ம் தற்காலிகமானது. அவரது நேர்த்தியான ஆட்டம் தான் நிரந்தரமானது. ரோகித் சர்மா, கேஎல் ராகுல் போன்ற வீரருக்கு பல வாய்ப்புகள் கொடுப்பது போல இவருக்கும் கொடுத்திருக்க வேண்டும்.” என்று ஜாஃபர் பேசினார்.