“விராட் கோலி சதம் அடிக்க விளையாடியதில் என்ன தப்பு?.. புரியாம பேசாதிங்க!” – களத்தில் குதித்த ஸ்ரீகாந்த் ஆவேசமான பேச்சு!

0
955
Virat

உலகக் கோப்பை தொடர் என்பதாலும் தொடரை நடத்தும் இந்தியாவின் அணி என்பதாலும் இந்திய அணியின் செயல்பாடுகள் குறித்து எப்பொழுதும் பரவலான பேச்சுகள் இருந்து கொண்டே இருக்கிறது.

இது உலகக்கோப்பையில் நேற்று பங்களாதேஷ் அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடிய போட்டியிலும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு போட்டியிலும் ஏதாவது ஒரு விஷயம் பெரிதாகி அது குறித்து சமூக வலைதளத்தில் எதிர்ப்பு ஆதரவு என்று பலர் கருத்துக்களை பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள்.

- Advertisement -

ஆஸ்திரேலியா போட்டியில் டாப் ஆர்டர்களின் பலவீனம் என்று பேசினார்கள். பாகிஸ்தான் போட்டியில் மதக்கோஷம் இழந்தது தொடர்பாக பிரச்சனையானது. தற்பொழுது நேற்று பங்களாதேஷ் அணிக்கு எதிராக விராட் கோலி சதம் அடித்தது பிரச்சினையாகி இருக்கிறது.

நேற்றைய போட்டியில் அணியின் வெற்றிக்கும், விராட் கோலியின் சதத்திற்கும் ஒரே அளவிலான ரன்கள் தேவைப்பட்ட நிலையில், விராட் கோலி சிங்கிள் ரன் ஓடி எடுக்காமல், தொடர்ச்சியாக ஒரு மூன்று ஓவர்களை சந்தித்து, அந்த ரன்களை எடுத்து, சதம் அடித்து அணியையும் வெற்றி பெற வைத்தார்.

தற்பொழுது விராட் கோலி இப்படி சதத்திற்காக விளையாடியது தவறு என்று ஒரு பிரிவினர் தங்களுடைய கருத்துக்களை சமூக வலைதளத்தில் பதிவு செய்து வருகிறார்கள். தவறில்லை என்றும் பெருவாரியான மக்கள் பதிவு செய்து வருகிறார்கள்.

- Advertisement -

மேலும் நேற்றைய போட்டியில் அந்த முறையில் விளையாட விராட் கோலி விரும்பவில்லை என்றும், தானேதான் அப்படி விளையாடச் சொல்லி விராட் கோலியை கூறினேன் என்றும், கேஎல்.ராகுல் கூறி இருந்தும் கூட, இந்த விமர்சனங்களை நிறுத்த முடியவில்லை.

தற்பொழுது இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் தேர்வுக்குழு தலைவருமான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், தன்னுடைய பாணியில் கொஞ்சம் காட்டமாகவே கருத்தை ட்விட்டரில் பதிவு செய்திருக்கிறார்.

அந்தப் பதிவில் அவர் எழுதும்போது “விராட் கோலி செய்ததில் என்ன தவறு இருக்கிறது? கிரிக்கெட்டையை புரிந்து கொள்ளாத மக்களை நோக்கி நான் கேள்வி கேட்கிறேன். உலகக் கோப்பையில் சதம் அடிப்பது எவ்வளவு பெரிய விஷயம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். விராட் கோலி இதுபோன்ற பலவற்றுக்கு தகுதியானவர். கேஎல் ராகுல் போன்ற வீரருக்கு என் பாராட்டுகள்.உங்களால் முடிந்தால் இதுகுறித்து மகிழ்ச்சி அடையுங்கள்!” என்று கூறியிருக்கிறார்!