ருதுராஜ் செஞ்ச தப்பு என்ன?.. எத்தனை நாளைக்கு இப்படியே.. டிராவிட் செய்வது சரியா? – ரசிகர்கள் கோபம்!

0
239
Ruturaj

தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி, தற்போது முதல் தொடராக டி20 தொடரில் சூரியகுமார் தலைமையில் தென் ஆப்பிரிக்காவை எதிர்த்து விளையாடுகிறது.

டர்பனில் நடக்க இருந்த இந்த தொடரின் முதல் போட்டி ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. அடுத்த வருடம் டி20 உலக கோப்பைக்கு முன்பாக வெறும் ஆறு சர்வதேச டி20 போட்டிகளே இந்திய அணிக்கு இருப்பதால், இது பின்னடைவாக பார்க்கப்பட்டது.

- Advertisement -

இந்த நிலையில் இன்று இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிக் கொள்ளும் இரண்டாவது டி20 போட்டி கியூபர்கா செயின்ட் ஜான்ஸ் பார்க் மைதானத்தில் நடக்கிறது.

இந்த போட்டிக்கான டாஸில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க கேப்டன் எய்டன் மார்க்ரம் வானம் மேகமூட்டத்துடன் பந்துவீச்சுக்கு சாதகமாக காணப்படுவதால், முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார்.

இந்திய அணியில் துவக்க ஆட்டக்காரர்களாக கில் மற்றும் ஜெய்ஸ்வால் இடம்பெற்று இருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கப்பட்டு அவருடைய இடத்தில் திலக் வர்மா வந்திருக்கிறார்.

- Advertisement -

மேலும் விக்கெட் கீப்பராக இஷான் கிஷான் நீக்கப்பட்டு ஜிதேஷ் சர்மாவுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. வழக்கம்போல் சூரியக்குமார் மற்றும் ரிங்கு சிங் இடம் பெற்று இருக்கிறார்கள். இந்த முறை சுழற் பந்துவீச்சு கூட்டணியாக ரவிந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் இடம் பெற்றிருக்கிறார்கள்.

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு யூனிட்டில் அர்ஸ்தீப் சிங், முகமது சிராஜ் மற்றும் முகேஷ் குமார் மூவரும் வருகிறார்கள். எதிர்பார்த்தப்படியே தீபக் சகர் இடம் பெறவில்லை. இந்த அணியிலும் பேட்டிங் வரிசை ஏழு வரை மட்டுமே இருக்கிறது.

இந்த நிலையில் கடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடி, ஒரு சதம் மற்றும் ஒரு அரை சதம் உட்பட 200 ரன்களுக்கு மேல் குவித்த ருதுராஜுக்கு கில் வந்ததும் வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது.

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஆரம்பித்து இந்த வருடத்தில் ருதுராஜ் தொடர்ச்சியாக ரோகித் சர்மா மற்றும் கில் இருவருக்கும் ஓய்வு கொடுப்பதற்காகவே பயன்படுத்தப்பட்டு வருகிறார். குறைந்தபட்சம் டி20 கிரிக்கெட் வடிவத்தில் ஆவது அவருக்கு நிலையான வாய்ப்பு வழங்கப்படும் என்று ஆஸ்திரேலியா தொடர் முடிந்து எதிர்பார்க்கப்பட்டது.

இப்படியான சூழலில் இன்று மீண்டும் கில்லுக்கு முன்னுரிமை கொடுத்து ருத்ராஜ் வெளியேற்றப்பட்டு இருக்கிறார். இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் குறிப்பாக ராகுல் டிராவிட் ருதுராஜ் விஷயத்தில் என்ன நினைக்கிறார் என்று புரியவில்லை. இதுகுறித்து ரசிகர்கள் தங்களுடைய கோபத்தை சமூக வலைதளத்தில் பதிவு செய்து வருகிறார்கள்!