“ரோகித்தும் கோலியும் எதுக்கு?.. திலக்கும் ரிங்குவும் பாவம்” – இந்திய முன்னாள் வீரர் அதிரடி பேச்சு!

0
147
Rohitsharama

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி உள்நாட்டில் வருகின்ற ஜனவரி 11ஆம் தேதி முதல் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது.

இந்தத் தொடருக்கு அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் கேப்டனாக ரோஹித் சர்மா மற்றும் நட்சத்திர வீரர் விராட் கோலி ஆகியோர் 14 மாதங்களுக்குப் பிறகு திரும்ப வந்திருக்கிறார்கள்.

- Advertisement -

2022 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து இடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த பிறகு, இந்திய மூத்த வீரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா, கேஎல் ராகுல் ஆகியோர் இந்திய டி20 அணியில் சேர்த்துக் கொள்ளப்படாமல் இருந்து வந்தார்கள்.

ஹர்திக் பாண்டியா தலைமையில் புதிய இளம் வீரர்கள் கொண்ட இந்திய டி20 அணி உருவாக்கப்பட்டது. தற்பொழுது அந்த அணி கலைக்கப்பட்டு மீண்டும் பழைய அணியே டி20 உலகக் கோப்பைக்கு உருவாக்கப்படுவதாக தெரிகிறது.

இதுகுறித்து இந்திய அணிக்கு முன்னாள் வீரர் தீப் தாஸ் குப்தா கூறும் பொழுது “ரோகித் மற்றும் விராட் கோலியை கடந்துவிட்டார்கள் என்று நினைத்தேன். ஆனால் தற்பொழுது மீண்டும் அணிக்குள் கொண்டு வந்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. கடந்த டி20 உலக கோப்பையில் மூத்த வீரர்கள் இன்டெண்ட் இல்லாமல் விளையாடியதுதான் பிரச்சனை. ஆனால் மீண்டும் அவர்களே கொண்டுவரப்பட்டு இருக்கிறார்கள்.

- Advertisement -

உலகக் கோப்பை நடக்கும் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் 180 முதல் 200 ரன்கள் அடிப்படும் விக்கெட்டுகள்தான் இருக்கும். ஆனால் இவர்கள் 160 ரன்கள் அடிக்கும் அணியை உருவாக்கி இருக்கிறார்கள். நேர்மையாக சொல்வதென்றால் கடந்த ஒரு வருடத்தில் இருந்து இந்தியாவுக்கு எந்த டைரக்ஷனும் இல்லை. தற்பொழுது மீண்டும் பழைய நிலைக்கு இந்திய அணி திரும்பியிருக்கிறது.

டி20 உலகக்கோப்பை அரையறுதியில் இங்கிலாந்துக்கு எதிராகவும், தற்பொழுது ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் விளையாடிய அணியில் இருந்து பார்த்தால் ஹர்திக், பும்ரா, சிராஜ், ஜடேஜா ஆகியோர் திரும்ப வருவார்கள்.ஆனால் இந்திய மிடில் ஆர்டர் அப்படியே இருக்கும்.

சூர்யா நான்காவது இடத்தில், ஹர்திக் ஐந்தாவது இடத்தில், ஜிதேஷ் இல்லை சாம்சன் ஆறாவது இடத்தில் விளையாடுவார்கள். இதனால் மிடில் ஆர்டர் மற்றும் பினிஷிங் இடத்தில் எந்த மாற்றமும் இருக்காது.

இதனால் ரிங்கு சிங் போன்ற ஒரு ஃபினிஷர் விளையாட முடியாமல் போகும். மேலும் நிறைய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இருப்பார்கள். ஆனால் கீழ் வரிசையில் ஏழு மற்றும் எட்டாம் இடத்தில் விளையாடுவதற்கு பேட்ஸ்மேன்கள் அரிதாகவே கிடைப்பார்கள். இப்பொழுது ஆப்கானிஸ்தானுக்கு எதிராக திலக் வர்மாவும் ரிங்குவும் விளையாடுவார்கள். ஆனால் ஹர்திக் மற்றும் சூர்யா திரும்ப வரும் பொழுது இவர்களுக்கு இடம் இருக்காது!” என்று கூறியிருக்கிறார்!