“நான் உலக கோப்பை மேல கால் வச்சதுல என்ன பிரச்சனை?” – மிட்சல் மார்ஸ் அதிரடி பேட்டி!

0
22043
Marsh

கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னால் இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்தியாவில் வைத்து, ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து, உலகக் கோப்பையை இழந்தது.

ஒட்டுமொத்த நாட்டையும் பெரிய சோகத்தில் இந்த தோல்வி கொண்டு வந்து நிறுத்தியது. இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் என அனைவரும் பெருத்த ஏமாற்றத்திற்கு உள்ளானார்கள்.

- Advertisement -

மேலும் அடுத்த மூன்று நாட்களில் இரண்டு அணிகளும் மீண்டும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதிக் கொள்கின்றன. இந்தத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா அணி வென்ற பொழுது, கையில் மது பாட்டில் உடன், கோப்பையின் மீது இரண்டு கால்களையும் தூக்கி வைத்தவாறு மிட்சல் மார்ஸ் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்திருந்தார்.

இந்த புகைப்படம் நிறைய சர்ச்சைகளை அப்பொழுது உருவாக்கியது. இதற்கு ஆதரவு எதிர்ப்பு என்று இந்தியாவில் சமூக வலைதளங்களில் இரு பிரிவாக ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வந்தார்கள்.

- Advertisement -

தற்பொழுது இதுகுறித்து கருத்து கூறியுள்ள மிட்சல் மார்ஸ் “அந்தப் புகைப்படத்தில் எந்த அவமரியாதையும் செய்யப்படவில்லை. நான் அதைப் பற்றி எதுவும் அதிகமாக சிந்திக்கவும் இல்லை. சமூக ஊடகங்களில் இது குறித்து நான் எதுவும் பெரிதாக பார்க்கவும் இல்லை.

உலகக் கோப்பையை வென்றதும் நாடு திரும்பாமல் ஆறு வீரர்கள் தொடர்ச்சியாக இந்தியாவில் தங்கி விளையாட வேண்டி இருந்தது. இது மிகவும் கடினமான செயல். ஆனாலும் நாம் ஆஸ்திரேலியாவுக்காக விளையாடுகிறோம். மேலும் இந்தியாவுக்கு எதிரான தொடர் என்றால் அது எப்பொழுதும் பெரியது.

இன்னொரு பக்கத்தில் வீரர்களை மனிதர்களாக எடுத்துப் பார்த்தால், இந்த உலகக் கோப்பையை வென்றதை அவர்கள் கொண்டாட நாடு விரும்பி தங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் இருந்திருக்கலாம்.

இதில் ஒரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால் பெரிய தொடர்களுக்கு பிறகு போட்டிகள் இருக்காது என்று நீங்கள் நம்புவீர்கள். ஆனால் இங்கேயே தங்கிய 6 வீரர்களுக்காக நான் கொண்டாடினேன். அவர்களுக்காக கொண்டாடினேன்!” என்று கூறியிருக்கிறார்!