“மேட்ச் டைம்ல எதுக்கு நட்பு!” இந்திய முன்னாள் வீரர் இந்திய பாகிஸ்தான் வீரர்களின் நட்பு குறித்து விமர்சனம்!

0
1045
Asia cup

இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற போட்டி ரசிகர்களின் பலத்தை ஏமாற்றத்திற்கு இடையே டிரா ஆகி இருக்கிறது. ஒரு மாதத்திற்கு மேலாக ரசிகர்கள் காத்திருந்த போட்டி என்பதால் விரும்பத்தகாத நிகழ்வாக அமைந்திருக்கிறது!

நேற்றைய போட்டியில் பழக்கமான இந்தியா பாகிஸ்தான் மோதிக் கொள்ளும் போட்டிக்கு என்ன மாதிரியான களத்தில் சூழ்நிலை நிலவுமே அது அப்படியே இருந்தது. ஆனால் ஒரே ஒரு வித்தியாசம், வீரர்கள் யாரையும் ஸ்லெட்ஜிங் செய்து கொள்ளவில்லை. இறுதியில் ஹாரிஸ் ரவுப் மட்டுமே இசான் கிஷான் விக்கெட்டை வீழ்த்தி கொஞ்சம் ஆக்ரோஷமாக இருந்தார்.

- Advertisement -

மேலும் போட்டி மழையால் கைவிடப்படுகிறது என்று நடுவர்கள் அறிவித்த பிறகு, விளையாட்டு சம்பிரதாய முறையில் வீரர்கள் கை குலுக்கிக் கொள்ளும் நிகழ்வு நடைபெற்றது. இதில் இந்திய வீரர்கள் குறிப்பாக விராட் கோலி பாகிஸ்தான் வீரர்களுடன் கலந்து மிக நீண்ட நேரம் பேசி சிரித்துக் கொண்டிருந்தார்.

இது மட்டும் அல்லாமல் போட்டி நாளுக்கு முந்தைய நாளில் பயிற்சியின் போது இந்திய வீரர்களும் பாகிஸ்தான் வீரர்களும் மிகுந்த நட்பான முறையில் கலந்துரையாடிக் கொண்டிருந்தார்கள். முன்பு இப்படி ஒன்று நடந்தால் பெரிய செய்தியாகும். ஆனால் இந்த தலைமுறை வீரர்கள் இதை மிகவும் இயல்பான ஒன்றாக மாற்றி இருக்கிறார்கள்.

இதுகுறித்து இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கூறும் பொழுது “நீங்கள் உங்கள் தேசிய அணிக்காக விளையாடும் பொழுது பவுண்டரி லைனுக்கு வெளியே நட்பை கைவிட்டு விட வேண்டும். இரண்டு அணி வீரர்களின் கண்களிலும் ஆக்ரோஷம் இருக்க வேண்டும். உங்களால் அது முடியும்.

- Advertisement -

கிரிக்கெட் விளையாடும் 6, 7 மணி நேரங்களுக்கு பிறகு நீங்கள் விரும்புகின்றபடி எப்படி வேண்டுமானாலும் நட்பாக இருங்கள். அந்த நேரம் மிகவும் முக்கியமானது. மேலும் நீங்கள் உங்களை பிரதிநிதித்துவப்படுத்த விளையாடவில்லை. கோடிக்கணக்கான மக்களை நாட்டை அடையாளப்படுத்த விளையாடுகிறீர்கள்.

இந்த நாட்களில் போட்டியின் போது வீரர்கள் ஒருவருக்கு ஒருவர் முதுகில் தட்டிக் கொடுத்துக் கொள்வதையும், முஷ்டி புடைப்புகளை பரிமாறிக் கொள்வதையும் நீங்கள் பார்க்கிறீர்கள். ஆனால் இதற்கு முந்தைய காலங்களில் உங்களால் அப்படி பார்க்க முடியாது.

நான் பாகிஸ்தான் வீரர்களுடன் நட்பில் இருந்து இருக்கிறேன். கம்ரன் அக்மல் நானும் நல்ல நண்பர்கள். நாங்கள் ஒருவருக்கு ஒருவர் ஒரு பேட் பரிசளித்துக் கொண்டோம். அவர் கொடுத்த பேட்டில் நான் ஒரு சீசன் முழுவதும் விளையாடினேன். தற்சமயம் கூட அவரிடம் நான் ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தேன்.

ஸ்லெட்ஜிங் செய்யலாம். ஆனால் அது தனிப்பட்டதாக இருக்கக் கூடாது. அது வரைமுறைக்குள் இருக்க வேண்டும். அதற்குள் யாரோ ஒருவரின் குடும்ப உறுப்பினரை கொண்டு வந்து பேசக்கூடாது. அல்லது மிகவும் பர்சனலான விஷயத்தை பேசக்கூடாது. கேலி செய்து கொள்வது பிரச்சனை கிடையாது. ஆஸ்திரேலியா பாகிஸ்தானுடன் விளையாடும் பொழுது அவர்கள் அப்படியான கேலிகளைத்தான் செய்வார்கள்!” என்று கூறியிருக்கிறார்!