“உண்மையில் இந்தியாவில் எங்களுக்கு நடப்பது வேறு!” – பாகிஸ்தானின் கேப்டன் துணை கேப்டன் அதிரடியான பேச்சு!

0
6627
Babar

இந்தியாவில் நடைபெற்று வரும் 13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில், ஏழு வருடங்களுக்குப் பிறகு இந்தியா வந்து பாகிஸ்தான் அணி விளையாடுகிறது.

இந்த அணியில் உள்ள பெரும்பாலான வீரர்களுக்கு இந்தியா மிகவும் புதிய நாடு. எனவே ஒவ்வொரு பாகிஸ்தான் வீரர்களும், இந்திய சூழ்நிலைகள் குறித்து மிகவும் உற்சாகமாக இருந்து வருகிறார்கள்.

- Advertisement -

அதே சமயத்தில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் மோதிக்கொண்ட போட்டியில், சில விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெற்றது. அது இந்தியாவிலேயே பெரிய விவாதமான ஒன்றாக மாறியது.

அதே சமயத்தில் பாகிஸ்தான் வீரர்கள் மைதானத்தில் வழிபாடு நடத்தியது தொடர்பாக பாகிஸ்தானின் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்து இருந்தார்.

மேலும் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் பேசியது, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்த பிரச்சனையை பெரிய அளவில் எடுத்துச் செல்வது தேவையற்றது என்பது குறித்தும் அவர் கூறியிருந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதன் தனக்கு பாகிஸ்தானில் ரசிகரால் மோசமான நிகழ்வு ஏற்பட்டாலும், அதை தாங்கள் பொருட்படுத்தாமல் பாகிஸ்தானின் விருந்தோம்பலை பெரியதாக பேசினோம் என்று கூறி, இந்த பிரச்சனைகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பெரிதுபடுத்துவதை நிறுத்த வேண்டும் என்று சொல்லியிருந்தார்.

பாகிஸ்தான் வாரியம் இந்த பிரச்சனையை ஐசிசி வரை புகாராக கொண்டு சென்று பேசிக்கொண்டு இருக்கும் வேளையில், பாகிஸ்தான் அணியின் வீரர்கள் இந்தியாவின் விருந்தோம்பலை மிகவும் புகழ்ந்து பேசி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பேசும் பொழுது “இந்தியாவிற்கு அனைவரும் முதல் முறையாக வந்திருக்கிறோம். இதில் முக்கியமான விஷயம் நாங்கள் மீண்டும் இந்தியா வர முடியாமலும் போகலாம். எனவே இந்த வாய்ப்பை அனுபவித்து விளையாட வேண்டும். ஒவ்வொரு மைதானத்திலும் எங்களுக்கு வித்தியாசமான அதிர்வும், உணர்வும் கிடைக்கிறது. எனவே எங்கு போட்டி நடந்தாலும் நாங்கள் அதை அனுபவிக்க நினைப்போம். இந்த மைதானத்தின் சூழல்களை கண்டு ரசிப்போம்!” என்று கூறியிருக்கிறார்.

மேலும் இது குறித்து பாகிஸ்தான அணியின் துணை கேப்டன் சதாப் கான் பேசும்பொழுது ” வித்தியாசமான உற்சாகம் இருக்கிறது. இதுவரை விருந்தோம்பல் மிகச் சிறப்பாக இருந்து வருகிறது. நிச்சயமாக இந்தியாவில் உற்சாகம் என்பது வேறு நிலையில் இருக்கிறது!” என்று கூறி இருக்கிறார்!