எது ஆனாலும் விராட் கோலி இடம் இது மட்டும் மாறாது – ராகுல் டிராவிட் ஆச்சரியம்!

0
695
Dravid

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் என்பதை தாண்டி உலக கிரிக்கெட்டின் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி. ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவர் சதம் அடித்துள்ள வேகம் இதுவரை எந்த ஒரு வீரரும் நினைத்து ஆசைப்படாத அளவுக்கு இருக்கிறது!

கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக விராட் கோலிக்கு ரன்கள் சரிவர வரவில்லை. இந்த நிலையில் கடந்த ஆசிய கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக அவருக்கு ஒரு சதம் வர அதற்கு அடுத்து நடந்த டி20 உலக கோப்பையில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் விராட் கோலி.

- Advertisement -

இதை எடுத்து இந்திய அணி பங்களாதேஷ் செல்ல முதலில் நடந்த ஒரு நாள் தொடரின் இரண்டு போட்டிகளில் சரியாக விளையாடாத விராட் கோலி மூன்றாவது போட்டியில் 44ஆவது ஒரு நாள் போட்டி சதம் அடித்து அசத்தினார். ஒவ்வொரு கிரிக்கெட் வடிவத்திலும் அவர் மீண்டும் தன் பழைய நிலைமைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார். இதே போல் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அவர் மீண்டு வருவார் என்று நம்பப்படுகிறது!

இது குறித்தெல்லாம் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறும் பொழுது ” விராட் கோலி 50 ஓவர் கிரிக்கெட்டில் நம்ப முடியாத வகையில் செயல்பட்டுள்ளார். இதை அவரது சாதனை புள்ளிவிவரங்களே கூறுகிறது. இது அவருக்கு 43 இல்லை 44ஆவது ஒரு நாள் போட்டி சதம் என்று நினைக்கிறேன். நான் இவரது புள்ளிவிபரங்கள் குறித்து தற்பொழுது பார்த்துக் கொண்டிருக்கிறேன். எப்பொழுது ஆக்ரோசமாக ஆட வேண்டும் எப்பொழுது கட்டுப்பாட்டுடன் ஆட வேண்டும் என்று அவருக்கு மிக நன்றாகத் தெரியும். அவர் ஒரு இன்னிங்ஸை கட்டி எழுப்ப முயற்சி செய்வது எங்களுக்கு மிக நல்ல அறிகுறி. அவர் உண்மையிலேயே ரன் பசியுடன் இருக்கிறார் என்பது எனக்குத் தெரியும் ” என்று கூறியுள்ளார்!

மேலும் தொடர்ந்து பேசிய ராகுல் டிராவிட் ” அவர் ரன் அடிக்கிறாரா இல்லையா என்பது எல்லாம் இரண்டாவது ஆனால் அவர் கடினமாக பயிற்சி செய்வது மட்டும் நிற்பதே கிடையாது. அணிக்குள் வரும் பல இளம் வீரர்களுக்கு இது ஒரு சிறந்த பாடம் என்று நான் நினைக்கிறேன். பங்களாதேஷில் விளையாடுவது புதிய அனுபவமாக இருக்கும். அணியில் உள்ள வீரர்கள் சிலர் இங்கு ஒரு நாள் போட்டி விளையாடியுள்ளனர். ஆனால் அவர்கள் இங்கு எந்தவித டெஸ்ட் போட்டியும் விளையாடவில்லை. டெஸ்ட் விளையாடும் அனைத்து நாடுகளின் அனைத்து பகுதிகளிலும் விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. பங்களாதேஷ் சமீப காலங்களில் உள்நாட்டில் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறது. இது எங்கள் அணி வீரர்களுக்கு மிகச்சிறந்த சவாலாக அமையும்” என்று கூறியுள்ளார்.

- Advertisement -