“நாளைக்கு என்ன நடந்தாலும் இதை செய்வோம்.. பசங்ககிட்ட சொல்லிட்டேன்!” – கேப்டன் சூரியகுமார் சிறப்பு பேட்டி!

0
13085
Surya

இந்தியாவில் உலகக்கோப்பை முடிந்து உடனடியாக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி உள்நாட்டில் மீண்டும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது.

அடுத்த வருடம் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை இருக்கின்ற காரணத்தினால், அதற்காக இந்திய டி20 கிரிக்கெட் அணியை மீண்டும் மாற்றி அமைக்க வேண்டிய தேவை இந்திய கிரிக்கெட் நிர்வாகத்திற்கு தற்பொழுது உருவாகி இருக்கிறது.

- Advertisement -

இப்போதைய நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா வெள்ளைப்பந்து கிரிக்கெட் விளையாட விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக அவர் டி20 கிரிக்கெட் விளையாட விரும்பவில்லை என்று கூறிவிட்டதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.

ஆகவே இந்திய அணி இளம்வீரர்களைக் கொண்டு புதிய அணியை அடுத்து வருகின்ற டி20 உலக கோப்பைக்கு தயார்படுத்த வேண்டிய நிலையில் இருக்கிறது. ஹர்திக் பாண்டியா காயம் அடைந்து இருக்கின்ற காரணத்தினால், தற்பொழுது சூரிய குமார் யாதவ் கேப்டன் பொறுப்பை ஏற்று இருக்கிறார்.

மேலும் இந்திய அணியின் பேட்டிங் அணுகுமுறை பொதுவாக அச்சமற்றதாக நவீன கிரிக்கெட்டுக்கு ஏற்ற வகையில் உருவாக்க வேண்டிய தேவை இருக்கிறது. ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி அப்படித்தான் உருவாக்கப்பட்டு வந்தது. இதை மேலும் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது.

- Advertisement -

இதைவிட மிக முக்கியமாக இந்திய அணி உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சில நாட்களுக்கு முன்பு தான் தோல்வி அடைந்தது என்கின்ற காரணத்தினால், அதிலிருந்து வெளிவர வேண்டிய அவசியமும் இருக்கிறது.

இந்த நிலையில் நாளை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டிக்கு முன்பாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய கேப்டன் சூரியகுமார் யாதவ் கூறும் பொழுது ” அடுத்து வரவிருக்கும் டி20 உலக கோப்பை தொடரை முன்வைத்து, எங்களுக்கு நடக்க இருக்கும் டி20 தொடர் மிகவும் முக்கியமானது ஆகும். எனது அணிக்கு நான் சொல்லும் செய்தி மிகவும் தெளிவானது. அவர்கள் அச்சம் இல்லாமல் விளையாட வேண்டும் அவ்வளவுதான்.

அவர்களால் அணிக்கு என்ன உதவி செய்ய முடியுமோ அதை செய்யலாம். அவர்கள் தொடர்ச்சியாக அதை செய்து கொண்டு வந்துள்ளனர். மேலும் எங்கள் அணி வீரர்களுக்கு ஐபிஎல் மற்றும் உள்நாட்டு டி20 தொடரில் விளையாடிய தற்போதைய அனுபவம் இருக்கிறது.

எனவே எங்கள் வீரர்கள் நல்ல நிலையில் இருக்கிறார்கள். நான் என் ஒட்டு மொத்த அணியினருக்கும் ஒரு விஷயத்தைச் சொன்னேன். நீங்கள் இருக்கும் நேரத்தை அனுபவியுங்கள். அதையே செய்யுங்கள் வேறு ஏதும் செய்ய வேண்டாம். நாள் முடிவில் இது வெறும் கிரிக்கெட் விளையாட்டுதான் என்று கூறி இருக்கிறேன்!” என்று தெரிவித்திருக்கிறார்!