“எது நடந்தாலும்.. 2015 மாதிரிதான் விளையாடுவோம்.. மாற்ற அவசியம் இல்லை” – பட்லர் அதிரடியான பேச்சு!

0
434
Buttler

இன்று ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இருக்கிறது.

இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 337 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

இதற்கடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான அணி 244 ரண்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இங்கிலாந்து மூன்றாவது வெற்றியைப் பெற்று, சாம்பியன்ஸ் டிராபிக்கும் தகுதி பெற்றது.

நடப்பு உலகச் சாம்பியன் ஆகவும், மிகப்பெரிய பேட்டிங் வரிசையை கொண்ட அச்சுறுத்தும் அணியாகவும் உலகக் கோப்பை வந்த இங்கிலாந்து, யாருமே எதிர்பார்க்காத விதத்தில் மிக மோசமான முறையில் தோல்விகளை பெற்று தற்பொழுது அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் வெளியேறி இருக்கிறது.

இங்கிலாந்து அணி வழக்கமான கிரிக்கெட் அணுகுமுறைக்கு எதிராக மிக அதிரடியாக விளையாடும் முறையை கொண்டிருக்கும் காரணத்தினால் தோல்வியடைந்து இருப்பதாக பலரும் கூறி வருகிறார்கள். இன்று வெற்றிக்கு பின் இது குறித்து இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் பேசி இருக்கிறார்.

- Advertisement -

வெற்றிக்குப் பின் பேசிய அவர் “நல்ல முறையில் செயல்பட்டு வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் உலகக் கோப்பையில் நாங்கள் எதிர்பார்த்த விதத்தில் விளையாடாதது ஏமாற்றமாக இருக்கிறது. நாங்கள் போதுமான அளவு எங்களுடைய திறமையை வெளிப்படுத்தவில்லை.

பென் ஸ்டோக்ஸ் அற்புதமான ஒரு வீரர். அவர் இல்லாமலேயே எங்களால் சமாளிக்க முடிந்திருக்க வேண்டும். ஒரு சில ஆட்டங்களுக்கு அவர் இல்லாமல் விளையாடியது எங்களுக்கு கடினமாக இருந்தது. ஆனால் அவர் இல்லாமல் வெல்லும் அளவுக்கு நாங்கள் போதுமானவர்களாகத்தான் இருந்தோம்.

டேவிட் வில்லி மிகவும் சிறப்பான ஒரு வீரர். எப்பொழுதும் தனிச்சிறப்பான வழியைக் கண்டுபிடித்து விளையாடுவார். நாங்கள் அவரை இனி தவற விடுவோம்.

2015 ஆம் ஆண்டு முதல் நாங்கள் விளையாடி வரும் முறையில் இருந்து பெரிதான மாற்றங்கள் எதையும் செய்யப் போவதில்லை. நாங்கள் இங்கிருந்து நிச்சயம் முன்னேற்றம் அடைவோம்!” என்று கூறி இருக்கிறார்!