“உலக கோப்பை இறுதிபோட்டி ஆடுகளம் எப்படி இருக்கும்?” – பிட்ச் பராமரிப்பாளர் வெளியிட்ட அதிரடி தகவல்!

0
2281
Wc

நாளை மறுநாள் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான குஜராத் அகமதாபாத் மைதானத்தில் 13வது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நடைபெறுகிறது.

இந்த இறுதிப் போட்டியில் தொடரை நடத்தும் இந்தியா மற்றும் ஐந்து முறை உலகக் கோப்பையை வென்று இருக்கின்ற ஆஸ்திரேலியா என சிறப்பான செயல்பாட்டை கொண்டு இருக்கும் இரண்டு அணிகள் மோதுகின்றன.

- Advertisement -

நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடிய பத்து போட்டிகளையும் வென்று சிறப்பான நிலையில் இருக்கிறது.

அதேபோல் ஆஸ்திரேலியா அணி தான் விளையாடிய கடைசி எட்டு போட்டிகளையும் வென்று இறுதிப் போட்டிக்கு வந்திருக்கிறது. எனவே அகமதாபாத் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை ரசிகர்களுக்கு பெரிய விருந்து காத்திருக்கிறது.

மேலும் குஜராத் அகமதாபாத் ஆடுகளம் எப்படி அமையும் என்கின்ற எதிர்பார்ப்பு வெளியில் இருக்கும் எல்லா கிரிக்கெட் ரசிகர்களுக்கும் மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது.

- Advertisement -

அதே சமயத்தில் இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதிய போட்டியின் ஆடுகளம் கடைசி நேரத்தில் மும்பையில் மாற்றப்பட்டதாக பெரிய சர்ச்சை எழுந்திருக்கிறது. ஐசிசி அதற்கு விளக்கம் கொடுத்த போதும் சர்ச்சைகளை உண்டாக்கியவர்கள் அடங்கவில்லை.

இந்த நிலையில் குஜராத் அகமதாபாத் மைதானத்தின் ஆடுகள அமைப்பாளர், இறுதிப் போட்டியின் ஆடுகளம் எந்த மண்ணால்உருவாக்கப்பட்டது? ஆடுகளம் எவ்வளவு ரன்கள் கொடுக்கக் கூடியதாக இருக்கும்? மேலும் ஆடுகள சர்ச்சை குறித்து பேசி இருக்கிறார்.

இந்த நிலையில் ஆடுகள சர்ச்சை குறித்து பேசி உள்ள பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறும் பொழுது “ஐசிசி ஆடுகள ஆலோசனையாளர் ஆண்டி அட்கிஸ்டன் அவருடைய வேலை முடிந்து நியூசிலாந்துக்கு சென்று விட்டார். அவர் இல்லாத போது சர்ச்சையை யாரும் உண்டு செய்ய வேண்டாம். இறுதிப் போட்டிக்கு முன்பாக ஐசிசி ஆடுகள ஆலோசகர் இங்கிருந்து நேரில் ஆஜராக வேண்டும் என்கின்ற எந்த விதியும் கிடையாது!” என்று கூறியிருக்கிறார்.

குஜராத் அகமதாபாத் மைதானத்தின் ஆடுகள அமைப்பாளர் கூறும் பொழுது “கருப்பு மண் கொண்ட ஆடுகளத்தில் ஹெவி ரோலர் பயன்படுத்தப்பட்டு இருக்கின்ற காரணத்தினால், ஆடுகளம் கொஞ்சம் இயல்பாகவே மெதுவானதாக இருக்கும். அதே சமயத்தில் முதலில் பேட்டிங் செய்தால் 315 ரன்கள் சரியாக இருக்கும். மேலும் பந்தின் லைனை பிடித்து அப்படியே விளையாடுவது கடினம். அதேபோல் இரண்டாவது பேட்டிங் செய்வதும் கடினம்!” என்று கூறி இருக்கிறார்!