தனியார் டி20 லீக்குகள் சர்வதேச கிரிக்கெட்டை என்ன செய்யும்? – அஷ்வின் துணிச்சலான கருத்து!

0
116
Ashwin

கிரிக்கெட் அதன் மரபிலிருந்து மாறி பின்பு 60 ஓவர் போட்டிகள் என்றும் அதற்குப் பிறகு 50 ஓவர் போட்டிகள் என்றும் பரிணமித்தது. தற்போது இது 20 மற்றும் 10 ஓவர்களுக்கு சுருங்கி இன்னும் வேகமாக தனது பாய்ச்சலை துவக்கி இருக்கிறது!

கிரிக்கெட்டின் இந்தக் குறுகிய வடிவத்தின் வேகமான பாய்ச்சல் கிரிக்கெட்டின் மற்ற வடிவங்களுக்கு நல்ல மாதிரியான பாதிப்பை மட்டுமே தருமா என்றால் கிடையாது. டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் இரண்டிற்கும் என்ற குறுகிய கிரிக்கெட் வடிவத்தால் பிரச்சனையே உருவாகியிருக்கிறது.

- Advertisement -

மேலும் இந்தக் குறுகிய வடிவ கிரிக்கெட்டை தனியார் முதலாளிகள் மூலம் தொடராக நடத்தப்படுகிறது. முதலாளிகள் இந்த குறுகிய வடிவை கிரிக்கெட் அதான் ஆதரிக்க பெரிய அளவில் முன்வருகிறார்கள். ஓரளவு பிரபலமான பெரிய கிரிக்கெட் நாடுகள் அனைத்துமே தங்களுக்கு என தனியே டி20 லீக்குகளை நடத்தி வருகின்றன.

இப்படி நடத்தப்படும் 20 நாட்களில் இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் ஐபிஎல் முதன்மையாய் இருக்கிறது. ஐபிஎல் அணிகளை வாங்கியிருக்கும் முதலாளிகள் மேற்கொண்டு மற்ற நாடுகளில் நடக்கும் டி20 போட்டிகளில் அணிகளையும் வாங்கும் அளவுக்கு நிலைமை மாறி இருக்கிறது.

ஐபிஎல் அணிகளின் ஆறு முதலாளிகள் தற்போது சவுத் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் நடத்த இருக்கும் டி20 லீக் களுக்கான 6 அணிகளையும் மொத்தமாக வாங்கி இருக்கிறார்கள். மேலும் யுனைடெட் அரபு எமிரேட் நடத்தும் இருபதுகளில் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு அணியை வைத்திருக்கிறது.

- Advertisement -

சமீபத்தில் ஒருநாள் போட்டிகள் கடினமானவை போட்டி அட்டவணைகளும் கடினமானவை என்று கூறி உலகின் நம்பர் ஒன் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஆன இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அடுத்து நியூசிலாந்தின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் டிரண்ட் போல்ட் நியூசிலாந்து அணியில் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறினார். அதே சமயத்தில் இவர்கள் மற்ற நாடுகளில் நடக்கும் டி20 போட்டிகளில் விளையாட பெரிதும் கவனம் காட்டுகிறார்கள். இதெல்லாம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளைப் குறைப்பதோடு அழிக்கவும் செய்யும் என்று பரவலாக பேச்சும் விவாதமும் நிகழ்ந்தது.

தற்போது இப்படியான தனியார் டி20 இலக்குகளின் வருகை சர்வதேச கிரிக்கெட்டிலும் கிரிக்கெட் வடிவங்களிலும் எப்படியான மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான தமிழகத்தைச் சேர்ந்த ஆர் அஸ்வின் தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார்.

இது சம்பந்தமாக ஆர் அஸ்வின் கூறும்பொழுது ” சர்வதேச கிரிக்கெட்டின் எதிர்காலமும் அதன் அட்டவணைகளும் பெரும்பாலும் தனியார் முதலாளிகளின் கிரிக்கெட் தொடர்களால் பாதிக்கப்பட போகிறது. இந்த முதலாளிகள் நடத்தும் டி20 கிரிக்கெட் லீக்குகளை நாம் கவனமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இது சர்வதேச கிரிக்கெட்டின் ஆரோக்கியத்தையும் ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும்” என்று தெரிவித்து இருக்கிறார்!