“இது என்ன விக்கெட்?.. பாகிஸ்தானை விட இலங்கைதான்.. பைனல்ல பாருங்க!” – கவுதம் கம்பீர் தடாலடி பேச்சு

0
977
Gambhir

நேற்று இந்திய அணி இதுவரை வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் இல்லாத ஒரு புதிய சவாலை சந்தித்து, அந்தச் சவாலில் மிகச் சிறப்பான வெற்றியும் பெற்று அசத்தியிருக்கிறது.

இந்திய அணி தொடர்ந்து மூன்றாவது நாளாக நேற்று இலங்கை அணிக்கு எதிராகவும் களம் இறங்கியது. இப்படி வெள்ளை பந்து கிரிக்கெட்டில் மூன்று நாட்கள் தொடர்ந்து இந்திய அணி இதுவரை களம் இறங்கியது கிடையாது.

- Advertisement -

அணியில் காயத்திலிருந்து திரும்பிய வீரர்கள் இருக்கின்ற நிலையில் இது இந்திய அணிக்கு மிகப்பெரிய சவாலான போட்டியாக அமைந்திருந்தது. இதன் காரணமாகவே இந்த போட்டி மீது எதிர்பார்ப்பு இருந்தது.

மேலும் நேற்றைய போட்டிக்கான ஆடுகளம் சுழற் பந்து வீச்சுக்கு அவ்வளவு தூரம் ஒத்துழைக்கும் என்று இலங்கை கேப்டனே நினைக்கவில்லை. அந்த அளவிற்கு ஆடுகளம் சுழற் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது.

இந்த நிலையில் இந்திய அணி 213 ரன்களுக்கு மடங்கி, பின்பு பந்துவீச்சில் 172 ரன்கள் இலங்கையை சுருட்டியது என்பது, மிக முக்கியமான செயல்பாடாக பார்க்கப்படுகிறது. இந்திய அணிக்கு உடல்ரீதியான சவால்கள் ஒருபுறம் இருந்தாலும், மனரீதியான சவால்களுக்கு இந்த போட்டி நல்ல ஒரு பரிட்சையாக இருந்தது.

- Advertisement -

இந்தப் போட்டியின் வெற்றி குறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் “இந்திய பேட்டிங் யூனிட் பற்றி எந்த சந்தேகமும் கிடையாது. காயத்திற்கு பிறகு வரும் பும்ரா மீது சந்தேகம் இருந்தது. பிறகு நம்மிடம் குல்தீப் போன்ற பந்துவீச்சாளர்கள் இருந்தார்கள். ஆனால் இந்த மாதிரியான கண்டிஷனில் 213 ரன்களை டிஃபன்ட் செய்தது சிறப்பு. எனக்கு ஆடுகளத்தில் கொஞ்சம் கிரிப் இருக்கும் என்று தெரியும். ஆனால் இந்த அளவிற்கு கிரிப் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.

இலங்கைக்கு எதிராக இந்த வெற்றி மிகவும் முக்கியமானது. அவர்கள் சுழற் பந்து வீச்சுக்கு எதிராக நன்றாக விளையாடும் அணி. இந்த வெற்றி இந்திய அணிக்கு தற்போது இறுதிப் போட்டியிலும் உலகக்கோப்பையிலும் கூட நல்ல நம்பிக்கையைக் கொடுக்கும்.

ஏனென்றால் பும்ரா மற்றும் குல்தீப் செயல்பாடு மிகச் சிறப்பாக இருக்கிறது. அவர்கள் விக்கெட் எடுக்க ஆரம்பிக்கும் பொழுது அது நம்பிக்கையை அதிகரிக்கிறது. மேலும் இது தனிப்பட்ட முறையில் கேப்டனுக்கும் நம்பிக்கையை அதிகரிக்கும்.

இந்த வெற்றி பாகிஸ்தான் அணிக்கு எதிராக 228 ரன் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியை விட மிக உறுதியானது. ஏனென்றால் இந்த வெற்றி இந்திய அணியின் நம்பிக்கையை மிக மிக அதிகரிக்கும்!” என்று கூறியிருக்கிறார்!