விராட் கோலிக்கு ஸ்மித் விரித்த வலை எப்படி? அடித்துச் சொல்லி ஆச்சரியப்படுத்திய அஸ்வின்!

0
1198
Ashwin

சென்னையில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான , மூன்றாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலியின் விக்கெட்டை எடுத்ததற்கு ஸ்டீவ் ஸ்மித்தின் அற்புதமான கேப்டன்சிக்கு நிறைய தொடர்பு இருப்பதாக , மூத்த இந்திய ஆஃப் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வின் கூறியுள்ளார்.

பேட் கம்மின்ஸ் இல்லாத நிலையில் ஆஸ்திரேலிய அணியை ஸ்மித் வழிநடத்தி தொடரை 2-1 என கைப்பற்ற உதவினார்.
அஸ்வின், இதற்கிடையில், ஸ்மித் தனது சுழற்பந்து வீச்சாளர்களை விராட் கோலியின் விக்கெட்டை எடுக்க ஆப்-ஸ்டெம்பிற்கு வெளியே பந்தை தூக்கி போடும்படி கூறியதையை கவனித்தாக கூறியுள்ளார்.

- Advertisement -

இந்தப் போட்டியில் , விராட் கோலி தனது அரைசதத்தை , சதமாக மாற்றாதது பெரும் தவறு என்றும் , இவர் அவருடைய பழைய விண்டேஜ் நிலைக்குத் திரும்புவதாகவும், உலகக்கோப்பையில் சிறப்பாக விளையாடுவார் என நம்புவதாகும் கூறியுள்ளார் .

ஆஸ்திரேலிய அணித்தலைவர் ஆடுகளம் சற்று இருக்கமாக இருப்பதை உணர்ந்து , இந்த சூப்பர் ஸ்டார் பேட்டரை ஒரு பவுண்டரிக்காக கவர் திசைக்கு மேல் தூக்கியடிக்க தூண்டும்படி பவுலர்களை ஊக்குவித்ததாகவும் , அதனை தொடர்ந்து அவ்வாறே திட்டத்தை செயல்படுத்த விராட் கோலி ஆஷ்டன் அகர் வீசிய வலையில் விழுந்தார்.

இது குறித்து அவரது யூடியூப் சேனலில் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியது ” ஆடம் ஜம்பா மற்றும் ஆஷ்டன் ஆகியோர் பந்துவீசும்போது, ​​ஆடுகளம் சற்று இருக்கமாக இருந்தது . விராட் கோலி மற்றும் ஹர்திக் இருவரும் எக்ஸ்ட்ரா கவரில் அடிக்க முயன்றனர், பந்து லாங்-ஆஃப் பீல்டருக்கு சற்று குறைவாக விழுந்தது” என்று கூறினார்

- Advertisement -

மேலும் அவர் கூறுகையில் ” ஸ்மித், முதல் ஸ்லிப்பில் இருந்து , ஆஷ்டன் அகரிடம் தொடர்ந்து கூறுவதை நான் கவனித்தேன், பந்தை ப்ளைட் செய்துவீசுங்கள். ஏனெனில் அவர்கள் பந்தின் லைனைப் பார்க்கும்போது, ​​​​அவர்கள் எக்ஸ்ட்ரா கவர்க்கு மேல் செல்ல முயற்சிப்பார்கள், மேலும் பந்து அதன் லைனில் நேராகச் சென்றால், அது லாங்- ஆன் பீல்டருக்கு செல்லும். மேலும் டேவிட் வார்னரை லாங்-ஆஃபிலிருந்து சிறிது முந்தி வரச் செய்து, விராட்டின் விக்கெட்டையும் எடுத்தார்கள் ” என்று கூறினார் .

விராட் கோலி குறித்து அஷ்வின் கூறுகையில் ” வழக்கமாக, விராட் கோலி அரைசதம் அடிக்கும்போது, ​​அதை அவர் எளிதில் சதமாக மாற்றி, தான் ஏன் ராஜா என்பதை நிரூபிப்பார். ஆனால் அன்று அவ்வாறு நடக்கவில்லை. ஆனால், அவர் நாளுக்கு நாள் மிகவும் சிறப்பாக விளையாடுகிறார் . உலகக்கோப்பையின் போது அதை விராட் கோலி சிறப்பாக செய்வார் , எனக்கு எல்லா நம்பிக்கைகளும் உள்ளன ” என்று கூறினார் .