“ரோகித் சர்மா நினைச்சது நடக்காது.. கரும்புள்ளிய உண்டாக்குவாங்க” – கவாஸ்கர் கோபம்!

0
165
Gavaskar

இந்திய அணி சமீபத்தில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக அவர்களது நாட்டில் விளையாடி, தொடரை ஒன்றுக்கு ஒன்று என சமன் செய்தது.

இந்த தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வென்றது. இந்த போட்டிக்கான ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக சரியான முறையில் அமைக்கப்பட்டிருந்தது.

- Advertisement -

ஆனால் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வென்றதும், இரண்டாவது போட்டிக்கான ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு மிகவும் ஆபத்தான முறையில் அமைக்கப்பட்டிருந்தது. சீரற்ற பவுன்ஸ் இருந்த ஆடுகளத்தில் பேட்ஸ்மேன் விளையாட முடியாமல் சிரமப்பட்டார்கள். மேலும் உடலின் பல இடங்களில் பந்து வந்து அடித்தது.

ஆனாலும் இந்திய தரப்பில் ஆடுகளம் பற்றி எந்த குறையும் சொல்லாமல், கொடுக்கப்பட்ட ஆடுகளத்தில் விளையாடி முடித்து வென்று தொடரை சமன் செய்தார்கள்.

இந்த போட்டியின் முடிவுக்கு பிறகு பேசி இருந்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, நாங்கள் எப்படி கொடுக்கப்படும் ஆடுகளங்களை குறை சொல்லாமல் விளையாடுகிறோமோ, அதேபோல் எங்கள் நாட்டிற்கு வந்து விளையாடும் பொழுது, ஆடுகளங்களை குறை சொல்லாமல் விளையாட வேண்டும் என்று கூறியிருந்தார்.

- Advertisement -

மேலும் அவர் இப்படியான ஆடுகளங்களை நடுவர்கள் எப்படி மதிப்பிடுகிறார்கள் என்பது குறித்து தான் தெரிந்து கொள்ள விரும்புவதாகவும், இந்தியாவிற்கும் மற்ற நாடுகளுக்கும் தனித்தனியாக இரட்டை முடிவுகள் எதிர்ப்பதைதான் வெறுப்பதாகவும் கூறியிருந்தார்.

தற்பொழுது ரோகித் சர்மாவின் இந்த கருத்தை ஆதரித்தும் அதே சமயத்தில் ரோகித் சர்மா எதிர்பார்ப்பது போல் நடக்காது என்றும் கவாஸ்கர் இந்திய ஆடுகளங்களை குறை சொல்பவர்கள் மீது கடுமையான கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இதுகுறித்து கவாஸ்கர் கூறும் பொழுது “இந்திய ஆடுகளங்களில் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் நாளில் பந்து திரும்பத் தொடங்கும் பொழுது கேள்வி கேட்க வேண்டாம் என்று ரோகித் சர்மா கேட்டிருந்தார். ஆனால் இது சாத்தியமற்ற ஒன்று. நிச்சயம் இது குறித்து கேள்வி கேட்பார்கள்.

இந்தியா கிரிக்கெட்டில் ஒரு பெரிய சக்தியாக வளர்ந்த பிறகு, ஐசிசி ரூம் போர்டுகளில் தங்களை வலிமையாக முன்னுறுத்திக்கொள்ள ஆரம்பித்தார்கள். ஏற்கனவே ஆதிக்கம் செலுத்திய பழைய சக்திகளால் இதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

எனவே இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இழிவு படுத்துவதற்கு திட்டத்துடன் இருக்கிறார்கள். எனவே இவர்கள் அதே முடிவோடு இந்தியாவிற்கு கிளம்பி வந்து, இங்கு நிலைமைகள் எப்படி இருந்தாலும் இந்திய கிரிக்கெட்டுக்கு கரும்புள்ளியை உருவாக்கவே நினைப்பார்கள்!” என்று கூறியிருக்கிறார்!