இது என்ன பஜ்ஜியா? மழைக் காலத்தில் இலங்கையில் ஆசிய கோப்பை.. சேவாக் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் மீது அதிரடித் தாக்கு!

0
625
Sehwag

பதினாறாவது ஆசியக் கோப்பை தொடரில் நேற்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி நடைபெற்றது!

இந்தப் போட்டியில் முதல் பாதி மட்டுமே நடைபெற்று இரண்டாவது பாதி மழையால் தடைபட்டு டிராவில் முடிந்தது. இதனால் இருநாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் தாண்டி முன்னாள் வீரர்களும் மிகப்பெரிய ஏமாற்றத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள்!

- Advertisement -

இந்தியா பாகிஸ்தான் போட்டிக்காக இரு நாடுகளில் இருந்தும் இலங்கைக்கு பெரிய அளவில் ரசிகர் கூட்டம் சென்று இருந்தது. குறிப்பாக இந்தியாவிலிருந்து நிறைய ரசிகர்கள் சென்று இருந்தார்கள். கண்டி நகரில் உள்ள எல்லா ஹோட்டல்களும் நிறைந்தது.

இப்படி ரசிகர்கள் தங்களுடைய நேரத்தையும் பணத்தையும் செலவழித்து இலங்கை சென்று போட்டிக்காக காத்திருந்தது மொத்தமும் நேற்று வீணானது. நேற்று ரசிகர்கள் பேசிய விதத்தில் இந்த ஏமாற்றம் அப்பட்டமாக வெளியே தெரிந்தது.

மேலும் இந்திய அணி நிர்வாகத்துக்கு போட்டி நடக்காதது ஒரு பின்னடைவுதான். தங்களுடைய பந்துவீச்சு படை எப்படி இருக்கிறது? காயத்தில் இருந்து திரும்பி வந்த ஜஸ்பிரித் பும்ரா எப்படி இருக்கிறார்? என்பது குறித்து கண்டறிய முடியாதது பின்னடைவே!

- Advertisement -

இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் சேர்மன் நஜாம் சேத்தி ஆசிய கிரிக்கெட் கவுன்சில் மீது இந்தியா பாகிஸ்தான் போட்டி மழையால் தடைபட்டதால் கடும் குற்றச்சாட்டு வைத்திருந்தார். துபாயில் போட்டி நடத்த தாம் முயற்சி மேற்கொண்டதாகவும், அங்கு வெயில் என்று மறுத்து விட்டதாகவும் கூறியிருந்தார். மேலும் விளையாட்டில் அரசியல் குறுக்கீடு மோசமானது என்று பேசி இருந்தார்.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக், மழைக்காலத்தில் இலங்கையில் ஆசிய கோப்பைத் தொடரை நடத்த முடிவெடுத்ததற்காக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் மீது, தன்னுடைய பாணியில் நகைச்சுவையாக விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார்.

வீரேந்திர சேவாக் இந்த விஷயம் தொடர்பாக ட்வீட் செய்யும் பொழுது
“மழைக்காலத்தில் பஜ்ஜி மட்டுமல்ல ஆசியக் கோப்பை தொடரும் கிடைக்கும்!” என்று குறிப்பிட்டிருக்கிறார். மேலும் நாளை முதல் சுற்றின் கடைசி போட்டியில் இந்திய அணி நேபால் அணியுடன் மோதும் போட்டி மழையால் கைவிடப்பட அதிகபட்ச வாய்ப்புகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.