“ஹர்திக் ஃபிட் இல்லனா என்ன இப்ப?.. இந்த பிளேயர் விமானம் ஏற போறார்” – கவாஸ்கர் பேட்டி

0
189
Hardik

இந்திய அணி நிர்வாகம் கடந்த ஒரு வருடமாக இளம் வீரர்களைக் கொண்டு ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்திய டி20 அணியை வடிவமைத்து வந்தது.

ஆனால் திடீரென ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி என இரண்டு மூத்த வீரர்களை அணிக்குள் கொண்டு வந்து மொத்தத்தையும் மாற்றி இருக்கிறது. மேலும் ஹர்திக் பாண்டியா காயத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா இடத்திற்கு சிவம் துபேவை தேர்வுக்குழு தேர்வு செய்தது.

இந்தத் தொடர் துவங்குவதற்கு முன்பாக சிவம் துபேவுக்கு இந்திய பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கும் என்று பலரும் நினைக்கவில்லை. ஆனால் இந்திய அணி நிர்வாகமும் கேப்டன் மற்றும் பயிற்சியாளரும் வேறு விதமாகச் சிந்தித்தார்கள்.

முதல் இரண்டு போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை பெற்ற சிவம் துபே இரண்டு போட்டிகளிலும் ஆட்டம் இழக்காமல் அரை சதங்கள் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். மேலும் பந்துவீச்சிலும் சில மாற்றங்கள் செய்து சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். இதன் காரணமாக இவரை டி20 உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்ய வேண்டும் என்கின்ற கோரிக்கைகள் வலுவாகி இருக்கின்றன.

- Advertisement -

இதுகுறித்து சுனில் கவாஸ்கர் கூறும் பொழுது ” ஹர்திக் இப்பொழுது பிட்டாக இல்லை என்றால் என்ன? இப்போது எல்லோரும் இது குறித்தே பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர் பிட்டாக வந்தாலும் கூட, இந்திய அணிக்காக டி20 உலகக்கோப்பை விளையாட சிவம் துபே விமானம் ஏறப்போகிறார்.

அவர் இதுபோன்ற முறையில் சிறப்பாக விளையாடினால் அவரை கைவிடுவது என்பது கடினமான ஒன்று. அவர் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறார். ஒரு தேர்வாளர்களுக்கு புதிய தலைவலியை உருவாக்கி இருக்கிறது.

இந்த இரண்டு ஆட்டங்களுக்கு பிறகு அவர் சர்வதேச தரத்தில் இருப்பதாக தெரிகிறது. இரண்டு அற்புதமான ஆட்டங்களை வெளிப்படுத்தியதால் சதவீரர்களின் பாராட்டும் மரியாதையும் அவருக்கு கிடைத்திருக்கிறது.

அவர் தன்னுடைய இயல்பான ஆட்டம் முறையில் வசதியாக இருக்கிறார். அவருக்கு தன்னுடைய இயல்பான ஆட்டம் பற்றி நன்கு தெரியும். அவர் யாரையும் ஜெராக்ஸ் எடுக்க முயற்சி செய்யவில்லை. இதைத்தான் என்னால் செய்ய முடியும் நான் அதைக் கொண்டு வருகிறேன் என்று விளையாடுகிறார்” என்று கூறியிருக்கிறார்.