லக்னோ அணியில் இருந்து விலகப் போகும் முன்னணி வீரர்! காரணம் என்ன?

0
2592

இந்திய பிரிமியர் லீக் தொடர்கள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன . 2023 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் 16வது சீசன் முதல் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் சென்னை அணி முதல் இடத்திலும் ராஜஸ்தான் அணி இரண்டாவது இடத்திலும் இருக்கிறது .

ஐந்து அணிகள் ஒரே புள்ளியுடன் இருப்பதால் ரன் ரேட் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது . இந்தத் தொடரில் 5 அணிகள் 8 புள்ளிகள் உடன் ரன் ரைட் வித்தியாசத்தில் புள்ளிகளின் பட்டியலில் பின்தங்கி இருக்கின்றன .

- Advertisement -

இனி வரும் போட்டிகளில் ஒவ்வொரு அணியின் வெற்றியோடு ரன் ரேட் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இவ்வாறு பல நிகழ்வு ஒரே புள்ளியில் இருக்கும் போது இறுதிக்கட்டத்தில் ரன் ரேட் இன் அடிப்படையிலேயே முதல் நான்கு இடங்களுக்குள் இருக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் .

கடந்த சனிக்கிழமை குஜராத் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் எளிதாக வென்று இருக்க வேண்டிய ஆட்டத்தை தோல்வியில் முடித்தது லக்னோ அணி. இந்த தோல்வி அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்திருக்கிறது . அந்தப் போட்டியில் வெற்றி பெற்றிருந்தால் லக்னவாணி தற்போது முதல் இரண்டு இடங்களுக்குள் இருந்திருக்கும் .

தற்போது லக்னா அணிக்கு மிகப்பெரிய பின்னடை ஒன்று ஏற்பட்டிருக்கிறது . அந்த அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரும் இங்கிலாந்து அணியின் அதிவேக பந்துவீச்சாளருமான மார்க் வுட் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் கடைசி கட்ட ஆட்டங்களில் பங்கேற்க மாட்டார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன . வருகின்ற மே மாத இறுதியில் அவருக்கு இரண்டாவது குழந்தை பிறக்க இருப்பதால் தனது நாட்டிற்கு செல்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . இதன் காரணமாக லக்னோ அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றாலும் மார்க் வுட் அணியில் இடம் பெற மாட்டார் என்று அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன .

- Advertisement -

மே மாதத்தின் இறுதியிலோ அல்லது அதற்கு முன்பாகவோ மார்க் வுட் இங்கிலாந்துக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது . உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த சில ஆட்டங்களில் மார்க் வுட் விளையாடவில்லை என்றாலும் இந்த சீசனில் லக்னோ அணிக்காக அவர் சிறப்பாக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த வருடத்தின் கோடை காலத்தில் ஆசஸ் தொடர் இங்கிலாந்தில் நடைபெற இருப்பதால் ஐபிஎல் தொடரில் இருந்து வீரர்களை முன்கூட்டியே அழைக்கும் திட்டம் எதுவும் இல்லை என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருக்கிறது .