2 மாசம் கூட இல்ல.. மீண்டும் மாறும் 2023 உலகக் கோப்பை அட்டவணை.. காரணம் என்ன.?

0
256

2023 ஆம் ஆண்டிற்கான 13வது ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிகள் இந்தியாவில் வைத்து அக்டோபர் மாதம் 5ஆம் தேதி துவங்க இருக்கிறது. பத்து அணிகள் கலந்து கொள்ளும் இந்தப் போட்டி மொத்தம் 45 நாட்கள் இந்தியாவில் வைத்து நடைபெறுகிறது.

இந்தப் போட்டிகளில் நடப்புச் சாம்பியன் ஆன இங்கிலாந்து மற்றும் கடந்த முறை இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த நியூசிலாந்து ஆகிய அணிகள் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெற இருக்கும் முதல் போட்டியில் விளையாட இருக்கின்றன . இந்த உலகக் கோப்பையின் இறுதி போட்டியானது நவம்பர் மாதம் 19ஆம் தேதி அகமதாபாத்தின் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற இருக்கிறது.

- Advertisement -

இந்த உலகக்கோப்பை போட்டியில் லீக் போட்டிகள் அரையிறுதி போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டி என முத்தம் 48 ஆட்டங்கள் நடைபெற இருக்கின்றன. இந்த உலகக் கோப்பை இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெற இருக்கிறது. சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி, பெங்களூர், ஹைதராபாத் அகமதாபாத், லக்னோ, புனே மற்றும் தர்மசாலா ஆகிய மைதானங்களில் நடைபெற இருக்கின்றன. அரை இறுதிப் போட்டிகள் மும்பை மற்றும் கொல்கத்தா மைதானங்களிலும் இறுதிப்போட்டி அகமதாபாத்திலும் வைத்து நடைபெற இருக்கிறது .

இந்நிலையில் உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டி அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி அகமதாபாத்தில் அமைந்துள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது . இந்நிலையில் அன்றைய தினம் நவராத்திரி பூஜை நடைபெற இருப்பதால் போட்டி நடைபெறும் மைதானத்திற்கு பாதுகாப்பு கொடுப்பதில் சிக்கல் இருப்பதாக குஜராத் காவல்துறை பிசிசிஐ-யிடம் தெரிவித்திருந்தது.

இது தொடர்பாக போட்டியை மாற்றுவது குறித்து பிசிசிஐ நிர்வாகிகளும் ஐசிசி உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த போட்டியானது அக்டோபர் 14ஆம் தேதி நடத்தப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது . இதுகுறித்து இன்னும் உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை . இந்நிலையில் மேற்கு வங்க மாநிலமான கொல்கத்தாவில் வைத்து பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோத இருக்கும் போட்டிகளுக்கும் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது .

- Advertisement -

இந்தப் போட்டியை வேறு தேதிக்கு மாற்றுவதற்கு பெங்கால் கிரிக்கெட் நிர்வாகம் பிசிசிஐ இடம் கோரிக்கை வைத்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. நவம்பர் 12ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் வைத்து விளையாட இருக்கின்றன . அன்று கொல்கத்தாவில் காளி பூஜை கொண்டாட இருப்பதால் ஒரே நேரத்தில் மைதானத்திற்கும் நகர் முழுவதும் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் இருப்பதாக கொல்கத்தா காவல்துறையினர் பெங்கால் கிரிக்கெட் அசோசியேஷன் தொடர்பு கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன . ஆனால் பெங்கால் டிக்கெட் அசோசியேசன் தலைவர் சிநேகசிஷ் கங்குலி இதனை மறுத்திருக்கிறார்.

இந்தப் போட்டி தொடர்பாக தாங்கள் இந்த கோரிக்கையையும் பிசிசிஐக்கு வைக்கவில்லை என்றும் இதுவரை கொல்கத்தா காவல்துறையிடம் இருந்து எந்த ஒரு கோரிக்கையும் தங்களுக்கு அதிகாரப்பூர்வமாக வரவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார். தங்களுக்கு அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு கோரிக்கையும் வராமல் ஐசிசி இடம் முறையிட முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார் . இஎஸ்பிஎன் கிரிக்இன்போ இணையதளத்தின் தகவல் படி பெங்கால் கிரிக்கெட் அசோசியேஷன் நவம்பர் 12ஆம் தேதி நடைபெற இருக்கும் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியை நவம்பர் 11ம் தேதி மாற்றி வைப்பதற்கு கோரிக்கை வைத்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது இந்த உலகக் கோப்பை காண அட்டவணை ஜூன் மாதம் தான் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் 2015 மற்றும் 2019 ஆம் வருட உலகக் கோப்பைகளுக்கான அட்டவணை போட்டி நடைபெறும் தேதியிலிருந்து ஒரு மாதம் முன்பே வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.