“ஆதிக்கம் பண்ற இந்தியாவை ஜெயிக்க என்ன பிளான்?” – பின்ச் கேள்விக்கு தப்பித்த ஸ்மித்!

0
2955

ஆஸ்திரேலியா அணி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் எட்டாவது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று அசத்தியிருக்கிறது.

நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக நடைபெற்ற அரையிறுதி போட்டியில் மூன்று விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

- Advertisement -

தென் ஆப்பிரிக்க அணி 31 ஆண்டுகளாக ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாட முடியாத சோகம் நேற்று வரையிலும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.

நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சு மற்றும் பீல்டிங் இரண்டும் மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. பந்துவீச்சு மற்றும் பேட்டிங் ஃபீல்டிங் என டிராவிஸ் ஹெட் அமர்க்களப்படுத்தினார். அவரே ஆட்டநாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நடப்பு உலகக் கோப்பை தொடரில் எல்லா அணிகளும் இரண்டு போட்டிகளை விளையாடும் முடித்து இருந்த பொழுது ஆஸ்திரேலியா புள்ளிப் பட்டியலில் பத்தாவது இடத்தில் இருந்தது.

- Advertisement -

இதற்குப் பிறகு ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் தொடர்ச்சியாக 8 போட்டிகளை வென்று, தற்பொழுது இந்திய அணிக்கு எதிராக நவம்பர் 19ஆம் தேதி குஜராத் அகமதாபாத் மைதானத்தில் இறுதிப் போட்டியில் விளையாட இருக்கிறது.

இந்திய அணிக்கு எதிராக என்ன திட்டம் என்று ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ஆரோன் பின்ச் ஸ்மித் இடம் கேள்வியை முன் வைத்தார். ஆனால் ஸ்மித் அந்தக் கேள்விக்கு நேரடியான எந்த பதிலையும் சொல்லாமல் தப்பித்தார்.

ஸ்மித் பேசும்பொழுது “நல்ல கேள்வி! இந்தியா மிகவும் நன்றாக கிரிக்கெட் விளையாடுகிறார்கள். அவர்கள் இதுவரையில் ஒரு ஆட்டத்திலும் இந்த உலகக் கோப்பை தொடரில் தோல்வி அடையவில்லை. 1,30,000 ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுக்கு முன்னால் விளையாடப் போகிறார்கள். இது ஒரு சிறந்த சூழ்நிலையாக இருக்கும். இதை நான் ஆவலோடு எதிர்நோக்குகிறேன்.

இன்று டிராவிஸ் ஹெட் பந்துவீச்சுக்கு ஏற்ற வகையிலான ஆடுகளம் இருந்தது. அவர் பந்தை நல்லாக ஸ்கிட் செய்து நல்ல திருப்பத்தை பெற்றார். இதில் அவருக்கு தொடர்ச்சியாக கிளாசன் மற்றும் யான்சன் என இரண்டு பெரிய விக்கெட் கிடைத்தது. கிளாசில் எவ்வளவு ஆபத்தானவர் என்பதை எங்களுக்கு தெரியும்.

ஹெட் பேட்டிங் செய்யும் விதம், அவர் மிகவும் ஆக்ரோஷமாக விளையாடுகிறார். அவர் கொஞ்ச நேரம் நின்று களத்தில் பேட்டிங் செய்தால், அவர் ஒரு பெரிய ஸ்கோரை பதிவு செய்து விடுவார். ஓரிரு நாட்களுக்குப் பிறகு இறுதிப்போட்டியில் அவர் இதே போல் எங்களை நல்ல நிலைமைக்கு கொண்டு வர முடியும்!” என்று கூறியிருக்கிறார்!