“ரஜத் பட்டிதார் கிரிக்கெட் எதிர்காலம் என்ன?” – இந்தியா பேட்டிங் கோச் வெளிப்படை பேச்சு

0
287
Rajat

தற்போது இந்திய அணி உள்நாட்டில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடி வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய இளம் வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். இந்திய கிரிக்கெட்டுக்கு இது நல்ல அறிகுறியாக பார்க்கப்படுகிறது.

விராட் கோலி இல்லாத நிலையில் இந்திய அணி தாக்குதல் பாணியில் விளையாடும் இங்கிலாந்து அணிக்கு எதிராக, பேட்டிங் செய்வதற்கு சாதகமான ஆடுகளங்களை அமைத்து வெற்றி பெறுவது, இந்திய கிரிக்கெட் நிர்வாகத்திற்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.

- Advertisement -

இந்தத் தொடரில் ரஜத் பட்டிதார் சர்ப்ராஸ் கான், துருவ் ஜுரல் என மூன்று வீரர்கள்இந்திய அணிக்காக அறிமுகமாக இருக்கிறார்கள். இதில் ரஜத் பட்டிதார் தவிர மற்ற இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

ரஜத் பட்டிதார் தன்னுடைய முதல் வாய்ப்பில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் துரதிஷ்டவசமான முறையில் ஆட்டம் இழந்து வெளியேறினார். ஆனாலும் அவருடைய பேட்டிங் டைமிங், பந்துகளை எதிர்கொண்ட விதம் சிறப்பாக இருந்தது.

ஆனால் இரண்டாவது வாய்ப்பில் அவர் இரண்டு இன்னிங்ஸிலும் ஆட்டம் இழந்த முறைமிகவும் மலிவாக இருந்தது. அவர் தவறான முறையில் விளையாடும் விக்கெட்டை கொடுத்திருந்தார்.

- Advertisement -

அதே சமயத்தில் 15 பேர் கொண்ட இந்திய அணியில் வாய்ப்புக்காக நல்ல பேட்டிங் ஃபார்மில் இடதுகை பேட்ஸ்மேன் தேவ்தத் படிக்கல் காத்திருக்கிறார். இந்திய டெஸ்ட் அணியில் மூன்றாம் மற்றும் நான்காம் இடத்தில் இடது கை ஆட்டக்காரர்கள் விளையாடி நாம் பார்த்ததில்லை. எனவே அந்த ஒரு வாய்ப்பு அவருக்கு வழங்கப்படலாம் என பேச்சு இருந்தது.

இந்த நிலையில் ரஜத் பட்டிதார் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் கூறும் பொழுது ” நாங்கள் அவருடன் நிறைய தொடர்ந்து பேசி வருகிறோம். ஆட்டம் எந்த முறையில் செல்கிறது என்பதை மட்டும்தான் அவர் புரிந்து கொள்ள வேண்டும். அவர் நிறைய ரன்களை குவித்ததின் மூலம்தான் இந்திய அணிக்கு தேர்வாகி இருக்கிறார்.

இதையும் படிங்க : “இந்திய சின்ன பசங்க பாஸ்பால நொறுக்கிட்டாங்க.. ஆனா இந்த இந்திய வீரருக்காக வருத்தப்படறேன்” – பிராட் ஹாக் பேச்சு

இரண்டு போட்டிகளில் அவருக்கு ரன்கள் வரவில்லை என்பதற்காக அவர் திறமை இல்லாத வீரர் என்பது கிடையாது. இப்படியான ஆட்ட இழப்புகள் யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். நிச்சயமாக அவருடைய நாளில் தாக்கம் நிறைந்த இன்னிங்ஸை அவரால் கொண்டு வர முடியும்” என நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.