டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுடன் மோதும் இந்திய பிளேயிங் 11 என்ன? கேப்டன் ரோகித் சர்மா தகவல்!

0
218
Rohitsharma

ஆஸ்திரேலியாவில் எட்டாவது டி20 உலகக் கோப்பை தொடர் வருகின்ற அக்டோபர் 22ஆம் தேதி தொடங்கி நவம்பர் 13ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது!

இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் அக்டோபர் 23ஆம் தேதி மெல்போர்ன் மைதானத்தில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது!

- Advertisement -

இதற்கு நடுவில் அக்டோபர் 17 மற்றும் 19 தேதிகளில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளோடு இந்திய அணி இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாட இருக்கிறது!

தற்போது இதற்காக இந்திய அணி பயிற்சி போட்டி நடைபெறும் பிரிஸ்பேன் மைதானத்திற்கு, மேற்கு ஆஸ்திரேலியாவை விட்டு கிளம்பி வந்திருக்கிறது!

உலகக் கோப்பைக்கான சம்பிரதாய நிகழ்வான அனைத்து அணிகளின் கேப்டன்கள் கொண்டு எடுக்கப்படும் புகைப்பட நிகழ்வு நடைபெற்றது. மேலும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பத்திரிக்கையாளர்களின் சில கேள்விகளை எதிர்கொண்டு அதற்கு பதில் அளித்தார்.

- Advertisement -

பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் முக்கியத்துவம் பற்றி பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு கேப்டன் ரோகித் சர்மா
“இந்தியா பாகிஸ்தான் மோதும் போட்டியின் முக்கியத்துவத்தை நாங்கள் புரிந்து கொள்கிறோம். அதற்காக எல்லா நேரமும் அதைப் பற்றியே பேசிக் கொண்டிருக்க முடியாது. நாங்கள் கடந்த முறை ஆசிய கோப்பையில் சந்தித்தபொழுது, எங்கள் குடும்பம் மற்றும் நாங்கள் என்ன கார்கள் வைத்திருக்கிறோம் என்று சாதாரணமான இயல்பான விஷயங்களைப் பற்றித்தான் அதிகம் பேசினோம்” என்று கூறினார்.

மேலும் தொடர்ந்து பேசிய ரோகித் சர்மா
” ஒரு போட்டிக்கு கடைசி நேரத்தில் அணியை மாற்றுவதில் எனக்கு நம்பிக்கை கிடையாது. பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் யார் யார் இடம் பெறுவார்கள் என்று ஏற்கனவே வீரர்களிடம் சொல்லிவிட்டேன். அவர்கள் அதற்கு தயாராகி வருகிறார்கள் ” என்று முக்கியமான தகவலை வெளியிட்டார்.

ஜஸ்பிரித் பும்ரா பற்றி ரோகித் சர்மா பேசுகையில் ” ஜஸ்பிரித் பும்ராவுக்காக நாங்கள் பல நிபுணர்களிடம் கருத்து கேட்டோம். அனைவரும் பும்ரா விளையாடுவது அவருக்கு ஆபத்தானது என்று கூறினார்கள். உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் என்பது பெரிய தொடர்தான். ஆனால் ஜஸ்பிரித் பும்ராவின் மொத்த கிரிக்கெட் வாழ்க்கை அதைவிட முக்கியமானது ” என்று தெரிவித்தார்!