இங்கிலாந்தின் விராட் கோலிக்கு என்னதான் ஆச்சு? 13 கோடி போச்சா?

0
253
Brook

இந்திய கிரிக்கெட் வாரியம் 15 வருடங்களாக வெற்றிகரமாக நடத்தி வரும் டி20 கிரிக்கெட் லீக் ஐபிஎல் தொடர் இந்த ஆண்டு 16-வது சீசனில் அடி எடுத்து வைத்து மிக சுவாரசியமாக நடைபெற்று வருகிறது!

இந்த தொடரில் மிக அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்களில் இதுவரை இங்கிலாந்தின் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் சாம் கரன் மட்டுமே சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருக்கிறார்.

- Advertisement -

இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ், ஆஸ்திரேலியாவின் கேமரூன் கிரீன் மற்றும் இங்கிலாந்தின் ஹாரி புரூக் மூவரும் இன்னும் தங்களது சிறப்பான செயல்பாட்டை ஐபிஎல் தொடரில் வெளிப்படுத்தவில்லை!

இதில் ஹாரி ப்ரூக் கிரிக்கெட் உலகத்தில் அடுத்த விராட் கோலியாக வருகின்ற திறமை கொண்டவர் என்று பரவலாக பலரால் பார்க்கப்படுகிறது. ஆறு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ள அவர் அதில் நான்கு சதங்கள் மற்றும் மூன்று அரை சதங்கள் விளாசி 80 ரன் ஆவரேஜில் இருக்கிறார். ஸ்ட்ரைக் ரேட் ஒரு நாள் கிரிக்கெட் போல 99 இருக்கிறது.

இதனால் இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தில் இவருக்கு நிறைய போட்டி இருந்தது. ஏலத்திற்கு வந்த இவரை ஆரம்பத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பெங்களூர் அணிகள் வாங்க போட்டி போட்டன. இதில் பெங்களூரு அணி 4.80 கோடியோடு விலகிக் கொண்டது. இதற்குப் பின் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உடன் மோதி 13.25 கோடிக்கு வாங்கியது

- Advertisement -

பேட்ஸ்மேனாக மிடில் வரிசையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று பலரும் எதிர்பார்த்து இருந்தார்கள். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் 21 பந்துகளைச் சந்தித்த இவர் 13 ரன்கள் எடுத்து சாகலிடம் கிளீன் போல்ட் ஆனார். இன்று மீண்டும் மற்றுமொரு லெக் ஸ்பின்னர் ரவி பிஸ்னாய் பந்துவீச்சில் நான்கு பந்துகளில் மூன்று ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார். அடுத்த விராட் கோலி என்று எதிர்பார்க்கப்பட்டவர் இந்திய ஆடுகளத்தில் டி20 கிரிக்கெட்டில் மிகுந்த தடுமாற்றத்துடன் பேட்டிங் செய்வது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.