“விராட் கோலி சதம் அடிக்கலனா என்ன?.. இந்த போட்டியே அவர் யார் என்பதற்கு சாட்சி!” – நியூசி டேரில் மிட்சல் அதிரடியான பேச்சு!

0
3509
Virat

நேற்று நியூசிலாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் மீண்டும் விராட் கோலி இந்திய அணியை கரை சேர்த்து, தான் யார் என்பதை நிரூபித்து இருக்கிறார்.

முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 273 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இறுதிக்கட்டத்தில் இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு நியூசிலாந்து அணியை மடக்கினார்கள்.

- Advertisement -

அதே சமயத்தில் இந்திய அணிக்கு நல்ல துவக்கத்தை வழக்கம்போல் கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக கொண்டு வந்தார். ஆனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்து கொண்டு இருந்தது.

சூரியகுமார் யாதவ் 2 ரன்களில் ரன் அவுட் ஆனது, இந்திய அணிக்கு திடீரென பெரிய அழுத்தத்தை கொண்டு வந்து விட்டது. இந்த நேரத்தில் ரவீந்திர ஜடேஜாவை வைத்துக்கொண்டு விராட் கோலி 79 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணியை வெல்ல வைத்தார்.

நேற்றைய போட்டியில் சதம் அடிப்பதற்கான வாய்ப்பில் இருந்த அவர் அந்த முயற்சியில் தோல்வி அடைந்து 95 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ஆனாலும் கூட அவருடைய ரன்கள் சதத்தை விட பெரியதாக பலரால் பார்க்கப்படுகிறது.

- Advertisement -

நேற்றைய போட்டியில் நியூசிலாந்து அணிக்கு சதம் அடித்த டேரில் மிட்சல் இது குறித்து கூறும் பொழுது ” விராட் கோலி ஒரு உலகத்தரம் வாய்ந்த வீரர். இன்று விளையாடிய ஆட்டம் என்பது அவர் ஏன் கிரேட்டஸ்ட் வீரர் என்பது தெரிய வருகிறது. அழுத்தத்தின் கீழ் அவருக்கு இது நல்ல போட்டி. அவர் நூறு ரண்களை எடுக்கவில்லை என்றாலும் கூட அணியை வெற்றியை கடக்க வைத்தார்.

நாங்கள் தொடர்ந்து வித்தியாசமான விஷயங்களை முயற்சி செய்வோம். நாங்கள் தொடர்ந்து விக்கெட்டுகளை வீழ்த்த முயற்சி செய்வோம். இன்று இரவு எங்கள் பவுலிங் யூனிட் இதை எப்படி செய்ய முயற்சி செய்தார்கள் என்பது குறித்து நான் பெருமைப்படுகிறேன்.

இங்கு பனிப்பொழிவு இருந்தது. ஆனால் இங்கு எங்களுடைய பந்துவீச்சு செயல்பாடு சிறப்பாக இருந்தது. இதுகுறித்து எங்களுக்கு பெருமையே. மேலும் அடுத்த வாரத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்!” என்று கூறியிருக்கிறார்!