“எனக்கு நடந்த அது.. உங்களுக்கு நடக்கக்கூடாது.. நான் நம்பறேன்!” – சாதனை உடைத்த கோலிக்கு சச்சின் வாழ்த்து!

0
1717
Virat

நடப்பு உலக கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இந்திய அணியின் போட்டி ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக மாறியிருக்கிறது.

இன்று இந்திய அணியின் ரன் மெஷின் விராட் கோலி தனது 35 வது பிறந்த நாளை கொண்டாடும் வேளையில், அவர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 49வது சதத்தை அடித்திருக்கிறார்.

- Advertisement -

மேலும் இதன்மூலம் விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்திருந்த சச்சின் டெண்டுல்கர் சாதனையை தற்பொழுது சமன் செய்திருக்கிறார். இருவருக்கும் இடையிலான இன்னிங்ஸ் வித்தியாசம் 175 என்பது விராட் கோலியின் வேகம் என்ன என்பதை காட்டும்!

இன்றைய இந்திய இன்னிங்ஸில் கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியாக 26 பந்துகளில் 40 ரன்கள் குவித்து பவர் பிளேவில் ஆட்டம் இழக்க, அதற்கு அடுத்து வந்த விராட் கோலி ஐம்பது ஓவர்களும் களத்தில் நின்று ஆட்டம் இழக்காமல் 101 ரன்கள் எடுத்தார்.

இன்றைய ஆடுகளம் புதிய பந்தில் விளையாடுவதற்கு சிறப்பாக இருந்தது. ஆனால் அதற்கு அடுத்து சுழற் பந்துவீச்சு வரும் பொழுது பந்து நன்றாக ஆடுகளத்தில் ஒட்டியும், திரும்பியும், மெதுவாகவும் சென்றது. இதன் காரணத்தால் ரன்கள் கொண்டு வருவது சிரமமாக இருந்தது.

- Advertisement -

அனுபவ வீரரான விராட் கோலி இதை உணர்ந்து ஸ்ரேயாஸ் ஐயரையும் வழிநடத்தி, பந்துகள் வீணாவது பற்றி கவலைப்படாமல் ஆட்டத்தை எடுத்துச் சென்று, இறுதியில் மிகச் சிறப்பாக முடித்துக் கொடுத்தார். இந்திய அணி தற்பொழுது 6 விக்கெட் இழப்புக்கு 326 ரன்கள் எடுத்திருக்கிறது.

இந்த நிலையில் தன்னுடைய ஒருநாள் கிரிக்கெட் சத சாதனையை சமன் செய்துள்ள விராட் கோலிக்கு சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய வாழ்த்துக்களை மிகவும் சிறப்பான முறையில் அனுப்பி இருக்கிறார்.

சச்சின் தன்னுடைய வாழ்த்துச் செய்திகள் கூறும்பொழுது “சிறப்பாக விளையாடினிர்கள் விராட்! நான் 49 ஆவது சதத்தில் இருந்து ஐம்பதாவது சதத்திற்கு செல்ல ஒரு ஆண்டுகள் தேவைப்பட்டது. ஆனால் உங்களுக்கு ஐம்பதாவது சதம் சில நாட்களில் கிடைக்கும்!” என்று நான் நம்புகிறேன் என்று கூறியுள்ளார்!