“2022 டி20 வேர்ல்ட் கப்ல நடந்தது தான் 2023 வேர்ல்ட் கப்ல நடக்க போகுது” – காரணத்தை புட்டு புட்டு வைத்த இந்திய முன்னாள் வீரர்!

0
252

13-வது உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறுவதற்கு இன்னும் மூன்று மாதங்களுக்கும் குறைவாகவே உள்ள நிலையில் தற்போதைய உலகக் கோப்பை காண கணிப்புகளும் தயாரிப்புகளும் துவங்கி விட்டன.

2023 ஆம் ஆண்டின் உலகக் கோப்பையை வெற்றி பெற மற்ற அணிகளை விட இந்திய அணி தான் அதிக முனைப்புடன் இருந்து வருகிறது. இது இந்தியாவில் நடைபெற இருக்கின்ற உலகக்கோப்பை போட்டி மேலும் இந்திய அணி ஐசிசி கோப்பையை வென்று பத்தாண்டுகள் ஆகிறது . இதனால் அக்டோபர் மாதம் நடைபெற இருக்கும் உலக கோப்பையை இந்தியா வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

- Advertisement -

தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி அந்த அணியுடன் ஒரு நாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது இதன் முதல் போட்டியை இந்தியா வென்ற நிலையில் இரண்டாவது போட்டியில் ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.இது பலரிடமும் விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் உலகக்கோப்பையில் முக்கிய வீரர்களாக கருதப்படும் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு இந்த போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டு இருந்தது .

இது குறித்து பேசிய இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் உலகக்கோப்பை காண அணி தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பாக வீரர்களை பரிசோதிப்பதற்கான சரியான களம் இதுதான் என குறிப்பிட்டு இருந்தார். இந்தக் கருத்தும் தற்போது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்திய அணி தொடர்ந்து இதுபோன்ற பரிசோதனைகளை செய்து கொண்டிருந்தால் 2022 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையில் ஏற்பட்ட நிலைதான் தற்போது நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக் கோப்பையிலும் ஏற்படும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கடுமையாக தெரிவித்திருக்கிறார் .

இது தொடர்பாக ஜியோ சினிமாவிற்கு அவர் அளித்த பேட்டியில் ” 2022 ஆம் ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிகளுக்கு முன்பாக இந்திய அணி தெளிவில்லாத திட்டங்களோடு பரிசோதனை முயற்சிகளை செய்து வந்தது. தற்போது இந்தியாவில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பை போட்டிகளுக்கு முன்பாகவும் அதே போன்ற பரிசோதனைகளை செய்து வருகிறது . இது இந்திய அணிக்கு மிகப்பெரிய சரிவாக அமையும் என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

- Advertisement -

மேலும் இது குறித்து தொடர்ந்து பேசிய அவர்” இந்திய அணிக்கு நான்காவது இடத்திற்கு விளையாடுவதற்கான வீரர் தான் பிரச்சனையாக இருக்கும்போது இஷான் கிசானை ஏன் துவக்க வீரராக இறக்கிபரிசோதனை செய்கிறார்கள் என்று புரியவில்லை”என தெரிவித்திருக்கிறார். “விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டது ஏன்?” எனவும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

” உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு பிறகு மூன்று வாரங்கள் ஓய்வு இருந்தது . வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சேர்த்து மொத்தமாக 7 நாட்கள் தான் விளையாடி இருக்கின்றனர். மேலும் முதல் ஒரு நாள் போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர் ஐ முழுமையாக விளையாடவில்லை. இப்படி இருந்தும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவை இரண்டாவது ஒரு நாள் போட்டியில் விளையாடாமல் ஓய்வு கொடுத்தது ஏன்? அவர்கள் இருவரும் டி20 போட்டிகளில் விளையாடாமல் ஓய்வு எடுக்கிறார்கள் என்றால் அதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால் உலக கோப்பைக்கு இன்னும் மூன்று மாதங்களுக்கும் குறைவாகவே உள்ள நேரத்தில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஏன் ஓய்வெடுக்க வேண்டும்?” எனவும் கேள்வி எழுப்பி உள்ளார்.

“கடந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பைக்கு முன்பாக இதுபோன்றுதான் அதிகமான பரிசோதனைகளை இந்திய அணி மேற்கொண்டது. அதற்கான விளைவு எவ்வாறு இருந்தது என்பதை நாம் பார்த்தோம் . தற்போது அவர்கள் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு முன்பாகவும் இது போன்ற பரிசோதனைகளை மேற்கொள்வது சரியாக படவில்லை” என தெரிவித்திருக்கிறார்