இன்னும் உங்களுக்கு அஷ்வின் என்ன நிருபிக்கனும்? அவரை ஏன் இப்படி நடத்துறிங்க? – இந்திய முன்னாள் வீரர் கடும் கோபம்!

0
584
Ashwin

பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் வைத்து ஆகஸ்ட் 30ஆம் தேதி துவங்க இருக்கும் ஆசிய கோப்பைக்கான 17 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. மேலும் பேக்கப் வீரராக சஞ்சு சாம்சன் அறிவிக்கப்பட்டிருக்கிறார். மேலும் இந்த வீரர்களில் இருந்தே ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்படும் என்றும் கூறப்பட்டு இருக்கிறது.

அதே சமயத்தில் நேற்று இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேசும்பொழுது, நாங்கள் அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர், சாகல் ஆகியோரை பற்றி பேசினோம், ஆனால் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு வாய்ப்பு தர வேண்டியது இருப்பதால், இவர்களில் ஒருவரை தேர்வு செய்ய முடியவில்லை. ஆனாலும் இவர்களுக்கு இன்னும் கதவுகள் சாத்தப்படவில்லை என்று வேறு ஒரு கருத்தை கூறியிருந்தார்.

- Advertisement -

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை முழுமையாக இந்தியாவில் நடத்தப்பட இருக்கிறது. எனவே அணியில் அனுபவம் வாய்ந்த சுழற் பந்துவீச்சாளர்கள் மிகவும் அவசியமானவர்கள். இது அடிப்படையான விஷயம்.

மேலும் இந்திய அணியில் இடது கை சுழற் பந்துவீச்சாளர்களாக ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் படேல் இருவரும் இருக்கிறார்கள். ஆனால் வலதுகை சுழற் பந்துவீச்சாளர்கள் ஒருவர் கூட கிடையாது. இந்த இடத்தில் இந்திய மைதானங்கள் பற்றியும், சர்வதேச அனுபவமும் கொண்ட ரவிச்சந்திரன் அஸ்வின் அக்சர் படேலுக்கு சரியான தீர்வாக இருந்திருக்க முடியும். மேலும் இவர் பேட்டிங்கும் செய்யக்கூடியவர்.

இந்த நிலையில் இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் கர்சன் கர்வி கூறும்பொழுது ” 212 சர்வதேச விக்கட்டுகள் வீழ்த்தி இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் இன்னும் என்ன நிரூபிக்க வேண்டும்? சீனியர் வீரராக இருந்தும் அவரை சரியாக நடத்தவே இல்லை. அஸ்வின் தரமான வீரர். அவரை ஆசியக் கோப்பைக்கு தேர்வு செய்திருக்க வேண்டும். ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் அவர் முக்கியமான பந்துவீச்சாளராக இருந்திருப்பார்!” என்று கூறியிருக்கிறார்!

- Advertisement -

மேலும் 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற அணியில் இடம் பிடித்திருந்த மதன்லால் கூறும் பொழுது
“சாகல் தேர்வு செய்யப்படாதது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அதே சமயத்தில் அஸ்வினும் கிடையாது. குல்தீப் யாதவை ஆஸ்திரேலியா நன்றாக விளையாடி இருக்கிறது. சாகலுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்க வேண்டும்.அவர் மேட்ச் வின்னிங் பவுலர்.

அஸ்வின் 500 600 விக்கெட்டுகள் எடுத்த ஒரு சர்வதேச அனுபவ பந்துவீச்சாளர். அவருக்கு விக்கெட் எடுப்பது எப்படி என்று தெரியும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் அவருக்கு வாய்ப்பு தரப்படவில்லை. அணி நிர்வாகத்திற்கு இது எல்லாம் நன்றாகவே தெரியும்!” என்று கூறி இருக்கிறார்!