என்ன சொல்றீங்க! ரிஷப் பண்ட் 2023 உலகக்கோப்பை விளையாடப் போறாரா? பும்ரா ரிடர்ன் எப்போ? – வெளியான சந்தோசமான தகவல்!

0
1566
Rishab

இந்திய கிரிக்கெட் அணி தற்போது தனது மிக முக்கியமான வீரர்களைக் காயத்தால் இழந்து மிகவும் சிக்கலான நிலைமையில் இருக்கிறது. இது அணியின் வெற்றியை மிகப்பெரிய அளவில் பாதித்து வருகிறது. குறிப்பாக முக்கிய போட்டிகளில்!

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ட்பிரித் பும்ரா, விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் தற்பொழுது தம்முடைய மறுவாழ்வில் இருக்கின்றனர்.

- Advertisement -

இதில் ரிஷப் பண்ட் கடந்த வருடத்தில் விபத்தில் சிக்கி மிக மோசமான பாதிப்புக்கு உள்ளாகி தற்பொழுது மிகவும் வேகமாக குணமடைந்து வருவது நேஷனல் கிரிக்கெட் அகாடமியை மகிழ்ச்சியாக்கி இருக்கிறது.

தற்பொழுது ரிஷப் பண்ட் தனது பிசியோ உடன் மாடிப்படிகளில் ஏறி இறங்கும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இதிலிருந்து அவர் நினைத்ததை விட வேகமாக குணமாகி வருவதாக நேஷனல் கிரிக்கெட் அகாடமி தெரிவிக்கிறது.

தற்பொழுது ரிஷப் பண்டுக்கு அக்வா தெரபி, லைட் ஸ்விம்மிங், டேபிள் டென்னிஸ் ஆகிய சிறிய சிறிய பயிற்சிகள் வழங்கப்பட்டு கொண்டு வருகிறது. அவரை இந்தியாவில் அக்டோபர் நவம்பர் மாதங்களில் நடக்க இருக்கும் ஒருநாள் உலகக்கோப்பைக்கு முன்பு அவர் முழுதாகக் குணமடைந்து அணிக்குத் திரும்புவார் என்று நம்பப்படுகிறது.

- Advertisement -

மேலும் பும்ரா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் நேஷனல் கிரிக்கெட் அகாடமியில் தற்பொழுது தங்களுடைய மறுவாழ்வில் இருந்து வருகிறார்கள். அங்கு அவர்களுக்குச் சரியான முறையில் கண்காணிப்பும் பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது.

இவர்கள் இருவர் குறித்தும் நேஷனல் கிரிக்கெட் அகாடமி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்தில் ஆகஸ்ட் மாதம் இறுதியில் நடக்க இருக்கும் ஆசியக்கோப்பைக்கு முன்பாக இவர்கள் குணமடைந்து விடுவார்கள் என்று கூறப்படுகிறது.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் அக்டோபர் நவம்பர் மாதத்தில் நடக்க இருக்கும் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு முன்னால் இந்த மூன்று முக்கிய முன்னணி வீரர்களும் இந்திய அணிக்குள் வந்து விடுவார்கள் என்பது மாதிரியாகத் தெரிகிறது. தற்பொழுது இந்திய கிரிக்கெட்டுக்கு இது நல்ல செய்தி!