“உங்களுக்காக பிரே பண்ணிக் கொள்கிறேன்!” விராட் கோலி – ஷாகின் ஷா அப்ரிடி என்ன பேசிக்கொண்டார்கள்? – வெளியானது விபரம்; வீடியோ லிங்க்!

0
80
Virat kohli

நாளை 6 ஆசிய நாடுகள் பங்குபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் யுனைடெட் அரபு எமிரேட்டில் துவங்க இருக்கிறது. இந்தத் தொடருக்காக இலங்கை பங்களாதேஷ் ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று அணிகள் ஒரு குழுவிலும், இந்தியா-பாகிஸ்தான் ஹாங்காங் ஆகிய மூன்று அணிகள் ஒரு குழுவிலும் இடம் பெற்று இருக்கின்றன!

இந்த தொடருக்கான பயிற்சியில் கடந்த புதன்கிழமை முதல் இந்திய அணி ஐசிசி அகாடமி மைதானத்தில் துபாயில் பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இந்தப் பயிற்சியின் போது பாகிஸ்தான் இந்திய வீரர்கள் சந்தித்து உரையாடிய புகைப்படங்கள் காணொளிகள் வெளியாகி இருந்தது.

- Advertisement -

மிக முக்கியமாக கடந்த டி20 உலக கோப்பையில் இது துபாயில் இந்திய அணி பாகிஸ்தான் அணியிடம் படுதோல்வியை சந்திக்க முக்கிய காரணமாக இருந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் சாகின் ஷா அப்ரிடி உடன் விராட் கோலி உரையாடியது மிக பரபரப்பாக அதிக அளவில் சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டது.

ஆசிய கோப்பைக்கு முன்னதாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட நெதர்லாந்து நாட்டிற்கு பாகிஸ்தான் அணி சுற்றுப்பயணம் செய்து இருந்தது அந்த அணியில் இடம் பெற்று இருந்த ஷாகின் ஷா அப்ரிடி முழங்கால் காயத்தால் அந்த தொடரிலும் அதற்கடுத்த தற்போது துவங்க இருக்கும் ஆசிய தொடரில் இருந்து வெளியேறினார். ஆனாலும் பாகிஸ்தான் கேப்டன் பாபர் கேட்டுக் கொண்டதின் பேரில் அவர் அணியுடன் தொடர்ந்து இருந்து வருகிறார். இப்படி இருக்கும் பொழுதுதான் பயிற்சியின்போது விராட் கோலி அவரை சந்தித்து உரையாடினார். தற்போது இவர்கள் இருவரும் என்ன உரையாடினார்கள் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் சமூக வலைதளம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறது.

அவர்கள் இருவருக்குமான உரையாடல் பின்வருமாறு நடந்தது.

- Advertisement -

விராட் கோலி: எப்படி இருக்கிறீர்கள்? எப்படி போகுது?

அப்ரிடி: இப்ப நல்லா இருக்கேன் இன்ஷா அல்லாஹ்!

விராட் கோலி : என்ன ஆச்சு?

அப்ரிடி : முழங்காலில் காயம்!

விராட் கோலி : கிழிஞ்சுருச்சா பெரிய காயமா?

அப்ரிடி: ஏசிஎல் அப்படின்னு சொல்றாங்க…

விராட் கோலி : ஏ சி எல் முடிஞ்சதா?

அப்ரிடி : உலகக் கோப்பை வரை … நீங்க திரும்ப பார்ம்புக்கு வர நான் பிரே பண்ணிக்கிறேன்…

விராட் கோலி : ஒ தேங்க்ஸ்…

அப்ரிடி : உங்கள பழையபடி பார்ப்பேன்!

விராட் கோலி : பார்ப்போம் பை…

தற்போது இவர்களுக்கு இடையே நடைபெற்ற இந்த உரையாடல் வெளிவந்து இரு நாட்டு ரசிகர்களையும் நிகழ்வு அடைய வைத்திருக்கிறது. சமூக வலை தளங்களில் இந்த செய்தி வேகமாக பகிரப்பட்டு வருகிறது. இருவரும் உரையாடிய வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது!