“விராட் கோலி அப்படி என்னதான் செய்தார்!” – உண்மையை வெளியிட்ட நவீன் உல் ஹக்!

0
454
Naveen

நடந்து முடிந்த ஐபிஎல் 16வது சீசனில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடைபெற்றன. அதேசமயத்தில் கிரிக்கெட் ஆர்வலர்கள் விரும்பாத சில சம்பவங்களும் நடைபெற்றன.

இதில் விராட் கோலி, நவீன் உல் ஹக், கௌதம் கம்பீர் இடையே மைதானத்தில் நடைபெற்ற காரசாரமான பேச்சு வார்த்தைகள் ஒட்டுமொத்த ஐபிஎல் களத்தையும் சூடாக்கியது.

- Advertisement -

பெங்களூரில் வைத்து லக்னோ அணி பெங்களூர் அணியை தோற்கடித்த போட்டியில், லக்னோ அணியின் மெண்டர் கௌதம் கம்பீர் பெங்களூர் ரசிகர்களை நோக்கி வாயில் விரல் வைத்து அமைதியாக இருக்கும்படி சைகை செய்தது அப்பொழுது வைரலானது.

இதைத்தொடர்ந்து லக்னோவில் நடைபெற்ற போட்டியில் பெங்களூர் அணி லக்னோவை தோற்கடிக்க, பதிலடியாக விராட் கோலி வெற்றி கொண்டாட்டங்களில் ஈடுபட்டார். மேலும் லக்னோ அணியில் நவீன் பேட்டிங் செய்து கொண்டிருந்த பொழுது விராட் கோலிக்கும் அவருக்கும் இடையே வாய் தகராறு ஆரம்பித்து. அது கைகுலுக்கல் நிகழ்விலும் சலசலப்பை உண்டாக்கி பெரிய சர்ச்சையானது.

தற்பொழுது இது குறித்து பேசி உள்ள நவீன் “சண்டையை நான் தொடங்கவில்லை. போட்டி முடிந்து நாங்கள் கைகுலுக்கி கொண்டிருக்கும் பொழுது, விராட் கோலிதான் சண்டையைத் தொடங்கினார். நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன்; நான் பொதுவாக யாரையும் திட்ட மாட்டேன். நான் அந்தப் போட்டியில் யாரையும் ஒரு வார்த்தை கூட எதுவும் சொல்லவில்லை. நான் எவரிடமும் அப்படி நடந்து கொண்டதில்லை.

- Advertisement -

அங்கிருந்த வீரர்களுக்கு நான் எப்படிச் சூழ்நிலையை சமாளித்தேன் என்பது நன்றாகத் தெரியும். நான் இந்த பிரச்சனைகளுக்குப் பிறகு எனது கோபத்தை விடவில்லை. போட்டிக்குப் பிறகு நான் செய்ததை அனைவரும் பார்க்கலாம். நான் விராட் கோலிக்கு நல்ல முறையில் கை கொடுத்தேன். ஆனால் அவர் என் கையை வலிமையாகப் பிடித்து நசுக்கினார். நானும் ஒரு மனிதன்தான், அதனால்தான் திருப்பி எதிர்வினையாற்றினேன்.

இந்தச் சம்பவத்திற்கான அபராதத்தை நீங்கள் பார்க்கும் பொழுது யார் பிரச்சனையை ஆரம்பித்தார்கள்? என்று நீங்கள் புரிந்து கொள்வீர்கள். யாராவது என்னிடம் இந்த மாதிரி நடந்து கொண்டால் நான் பின்வாங்க மாட்டேன். நான் ஆப்கானிஸ்தான் அணிக்காக அண்டர் 16 விளையாட ஆரம்பித்த காலத்தில் இருந்து யாரையும் எதுவும் தவறாகச் சொன்னது கிடையாது. யாராவது என்னிடம் அப்படி நடந்தால் நான் அமைதியாகவும் இருந்தது கிடையாது. நான் தருவதை திருப்பித் தருகிறேன். இதை நீங்கள் தவறாகச் சொல்லலாம். ஆனால் இதுதான் நான்!” என்று கூறி இருக்கிறார்!