பாகிஸ்தான் மேட்ச்ல எங்களால என்ன செய்ய முடியும்? இவ்வளவுதான் முடியும் – ஜடேஜா வெளிப்படையான பேச்சு!

0
423
Jadeja

தற்போது இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தின் இறுதித் தொடர்பான ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது!

இந்தத் தொடர் தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் இருந்து இடம்பெயர்ந்து அமெரிக்காவுக்கு வந்திருக்கிறது. முதல் மூன்று போட்டிகள் வெஸ்ட் இண்டிஸ் நாட்டில் நடைபெற்ற நிலையில் அடுத்த இரண்டு போட்டிகள் இன்றும் நாளையும் அமெரிக்காவில் நடக்கிறது.

- Advertisement -

இந்தத் தொடரை முடித்துக் கொண்டு இந்திய அணி ஜஸ்பிரித் பும்ரா தலைமையில் அயர்லாந்து நாட்டிற்கு மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது.

இந்திய வெள்ளைப்பந்து அணியின் முக்கிய வீரர்களைக் கொண்ட முக்கிய அணி பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடக்கும் ஆசிய கோப்பை ஒருநாள் தொடரில் செப்டம்பர் இரண்டாம் தேதி இலங்கையில் வைத்து பாகிஸ்தான் அணியுடன் மோத இருக்கிறது. இந்தியாவில் நடக்கும் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர்க்கும் முன்பாக இது இந்திய அணிக்கு மிக முக்கியமான தொடராகும்.

இந்தத் தொடரில் எல்லாம் சரியாக அமைந்து இந்தியா பாகிஸ்தான் அணிகள் இறுதிப் போட்டியில் சந்தித்துக் கொள்ளும் என்றால் மூன்று போட்டிகளில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் விளையாடும். மேலும் உலகக் கோப்பை தொடரில் ஒரு போட்டியில் உறுதியாக விளையாடும். அதிலும் வாய்ப்புகள் இருந்தால் நாக் அவுட் சுற்றில் இந்திய அணி ஒரு போட்டியில் விளையாட வாய்ப்பு இருக்கிறது.

- Advertisement -

இப்படி ஒரே ஆண்டில் 5 போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி விளையாட வாய்ப்பு இருக்கின்ற காரணத்தினால், இரு நாட்டு கிரிக்கெட் ரசிகர்களும் நிகழ்ந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். குறைந்தபட்சம் மூன்று போட்டிகள் உறுதி என்ற நிலையில் இருக்கிறது.

தற்பொழுது இந்தியா பாகிஸ்தான் மோதிக் கொள்ளும் போட்டி குறித்து இந்திய அணியின் முன்னணி வீரரான ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா கூறும்பொழுது “இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ஒரு போட்டி நடக்கும் பொழுது வெற்றி பெறுவதற்கு மிகுந்த எதிர்பார்ப்புகள் இருக்கும். ஆனால் எங்களைப் பொறுத்தவரை இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கு நாங்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை மற்ற எந்த அணிகளுடன் விளையாடும் பொழுதும் கொடுப்போம். இருந்தாலும் இந்தியா பாகிஸ்தான் போட்டிகள் அதிக கவனத்தை ஈர்க்கிறது என்பது உண்மை. நாங்கள் எங்கள் திறமையை சிறப்பாக வெளிப்படுத்த முயற்சி செய்வோம்.

எங்கள் செயல் திறனை முழுதாக வழங்குவதையும், சிறப்பாக விளையாடுவதையும் மட்டுமே நாங்கள் நோக்கமாகக் கொண்டு இருக்கிறோம். ஆனால் விஷயங்கள் சில நேரங்களில் திட்டமிட்டபடி நடக்காது. இது ஒரு விளையாட்டு. மேலும் இருநாட்டு வீரர்களும் அந்தந்த நாட்டை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்.

என் கருத்துப்படி இருநாட்டு வீரர்களும் 100% வெளிப்படுத்தி விளையாடினாலும், போட்டி குறித்து எந்த உத்திரவாதத்தையும் என்னால் தர முடியாது. நீங்கள் உங்களால் முடிந்ததை கொடுத்து வெற்றி பெற விளையாடலாம். ஆனால் அந்த நாளின் முடிவில் உங்களது திட்டங்கள் உங்கள் வழியில் செல்லவில்லை என்றால், உங்களால் ஒன்றுமே செய்ய முடியாது. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், உங்களிடம் இருக்கும் மொத்தத்தையும் கொடுத்து வெற்றிக்காக விளையாடுவது மட்டும்தான்!” என்று கூறியிருக்கிறார்!